மேலும் அறிய
மதுரை மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் முகாம்!
தொழிற்பழகுநராக தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூபாய் 10,560- முதல் 15,000- வரை வழங்கப்படும்.

தொழில் பழகுநர்
Source : whatsapp
மாணவர்கள் தங்களது கல்வி தேர்ச்சி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
மதுரை மாவட்டத்தில் உள்ள 10th, 12th ITI, பாலிடெக்னிக், மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவியர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கிடும் பொருட்டு பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கோ.புதுார், மதுரையில் 16.11.2026 (திங்கள் கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் நடைபெற உள்ளது.
தொழில் பழகுநர்களை தேர்வு
இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள உள்ள மாணவர்கள் தங்களது கல்வி தேர்ச்சி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை
தொழிற்பழகுநராக தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூபாய் 10,560- முதல் 15,000- வரை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மதுரை, மூன்றுமாவடியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலும் அல்லது அலைபேசி எண். (9499055748, 9843372096, 9942004187)-க்கும் தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















