மேலும் அறிய

எம்பிபிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல்: மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவன் !

7.5% உள் இட ஒதுக்கீட்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவா மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22 ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்விற்கு கடந்த மாதம் 19 ம் தேதி முதல் ஜனவரி 7 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 37அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோல், அகில இந்திய அளவில் 15 சதவீத இடங்களும் இந்த கலந்தாய்வின் மூலம் ஒதுக்கப்படுகிறது.

இந்த கலந்தாய்விற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 மாணவர்களும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 மாணவர்கள் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர். இதையடுத்து, மாணவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 

இதில், அரசு, சுயநிதி மற்றும் 7.5 சதவீத அரசுப் பள்ளி உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில்1,806 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தநிலையில், 7.5% உள் இட ஒதுக்கீட்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவா மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 514 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

இதுகுறித்து அந்த மாணவன் சிவா தெரிவிக்கையில், "அரசு பள்ளியில் பயின்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேரும் போது ஆங்கிலம் தடையாக இருக்க கூடாது என்று நினைத்தேன். இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 பேர் அலஞ்சிரங்காடு குருகுலம் சிவநேசன் ஆசிரியரிடம் ஆங்கில திறன் பயிற்சி பெற்று வருகிறோம்.இதனால் பயன் உள்ளதாக தெரிவித்துள்ளார்". 

கலந்தாய்வு : 

இளநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு வருகிற ஜனவரி 27 ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த 2நாட்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடியாக நடைபெற இருக்கிறது. அதேபோல், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு வருகிற ஜனவரி 30 ம் தேதி முதல் முறையாக ஆன்லைனில் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget