Kalaignar Karunanidhi: 10-ஆம் வகுப்பு பாடத்தில் பன்முகக் கலைஞர்: பறைசாற்றப்படும் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழ்!
தற்போது 10ஆம் வகுப்புப் புத்தகத்தில் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. இதில், ''பன்முகக் கலைஞர்'' என்ற தலைப்பில் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
''அறிமுகம் பன்முகக் கலைஞர்'' என்ற தலைப்பில் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலைஞர் குறித்த பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
9ஆம் வகுப்புப் புத்தகத்தில் கலைஞர்
முன்னதாக சட்டப்பேரவையில் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
அதையடுத்து 2023-24ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடப் புத்தகம் அச்சடிக்கப்பட்டு, வழங்கப்பட்டது.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழியே பாடல் மட்டும் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், 9ஆம் வகுப்புப் பாடப்புத்தக்கத்தில் முதல்முறையாக அவர் குறித்த பாடம் இடம் பெற்றது.
பன்முகக் கலைஞர்
தொடர்ந்து தற்போது 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. இதில், ''பன்முகக் கலைஞர்'' என்ற தலைப்பில் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலைஞர் குறித்த பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கலைஞர் கருணாநிதியின் பன்முகத் தன்மைகளை வெளிப்படுத்தும் வகையில், 11 உப தலைப்புகளில் 5 பக்கங்களுக்கு இந்த பாடம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தை உள்ள கலைஞர், போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக் கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் உள்ளிட்ட தலைப்புகளில் உள்ளடக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.