மேலும் அறிய

மாதாமாதம் உதவித்தொகை: கவின்கலை, இசை, சிற்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

சென்னை, கோயம்புத்தூர்‌, திருவையாறு, மதுரை ஆகிய இடங்களில்‌ அரசு இசைக் கல்லூரிகள்‌ செயல்படுகின்றன. இங்கு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

கலை பண்பாட்டுத்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளில்‌ மாணவ/ மாணவியர்‌ சேர்க்கை‌ தொடங்கி உள்ளது.

இதுகுறித்துக் கலை பண்பாட்‌டுத் துறை இயக்குநர்‌ அறிவித்து உள்ளதாவது:

’’தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்‌ துறையின்‌ கீழ்‌ தமிழ்நாட்டில்‌ 17 மாவட்டங்களில்‌ இசைப் பள்ளிகள்‌, நான்கு இடங்களில்‌ இசைக்‌ கல்லூரிகள்‌, இரண்டு கவின்‌ கலைக்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ ஒரு சிற்பக்‌ கல்லூரி ஆகியவை செயல்படுகின்றன. இக்கல்வியகங்களில்‌ 2024-2025 ஆம்‌ கல்வியாண்டிற்கான மாணவ/மாணவியர்‌ சேர்க்கை தொடங்கியுள்ளது.

மாதாந்திர கல்வி உதவித்‌ தொகை

காஞ்சிபுரம்‌, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம்‌, ஈரோடு, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை (சீர்காழி), திருவாரூர்‌, திருச்சிராப்பள்ளி, கரூர்‌, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌. சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில்‌ இசைப் பள்ளிகள்‌ செயல்படுகின்றன. இப்பள்ளிகளில்‌ மூன்று ஆண்டு சான்றிதழ்‌ படிப்பில்‌ தேர்ச்சி பெறும்‌ மாணாக்கர்கள்‌ அரசு இசைக்‌ கல்லூரியில்‌ நேரடியாக மூன்றாம்‌ ஆண்டில்‌ டிப்ளமோ வகுப்பில்‌ சேருவதற்கு அரசு அனுமதியளித்து ஆணையிட்டுள்ளது. இசைப் பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு மாதம்‌ ரூ.400/- கல்வி உதவித்‌ தொகை அளிக்கப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர்‌, திருவையாறு, மதுரை ஆகிய இடங்களில்‌ அரசு இசைக் கல்லூரிகள்‌ செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில்‌ இசை, நாட்டியம்‌ ஆகிய பிரிவுகளில்‌ பட்டப் படிப்புகளும்‌ மேற்காண்‌ கலைகளோடு கிராமியக்‌ கலைகளில்‌பட்டயப் படிப்புகளும்‌ உள்ளன. இசைக் கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்களுக்கு மாதம்‌ ரூ.500/- கல்வி உதவித்‌ தொகை அளிக்கப்படுகிறது.

சென்னை மற்றும்‌ கும்பகோணம்‌ ஆகிய இடங்களில்‌ செயல்படும்‌ அரசு கவின்‌ கலைக்கல்லூரிகளில்‌ ஓவியக்கலை சார்ந்த பிரிவுகளில்‌ இளங்கலைப்‌ பட்டம்‌ மற்றும்‌ முதுகலை பட்டப்படிப்புகளும்‌, மாமல்லபுரத்தில்‌ செயல்படும்‌ அரசினர்‌ கட்டடக்‌ கலை மற்றும்‌ சிற்பக்‌ கலைக்‌ கல்லூரியில்‌ சிற்பக்கலையில்‌ இளங்கலைப்‌ பட்டம்‌ மற்றும்‌ கோவில்‌ கட்டடக்‌ கலையில்‌ பி.டெக்‌ படிப்புகளும்‌ உள்ளன.

மாணவர் சேர்க்கை தொடக்கம்

இக்கல்வியகங்களில்‌ 2024-2025 ஆம்‌ கல்வி ஆண்டுக்கான சேர்க்கை (Admission) தொடங்கியுள்ளது. பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளில்‌ உள்ள படிப்புகள்‌ விவரம்‌, வயது வரம்பு மற்றும்‌ கல்வித்‌ தகுதி விவரங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ காணலாம்‌. மேற்காண்‌ ஏழு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்‌ இந்த இணையதளத்தின்‌ வாயிலாகவும்‌ விண்ணப்பிக்கலாம்‌’’ என கலை பண்பாட்டுத்துறை இயக்குநர்‌ காந்தி தெரிவித்து உள்ளார்‌.

கூடுதல் தகவல்களுக்கு: www.artandculture.tn.gov.in 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Embed widget