மேலும் அறிய

Teachers Promotion : ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Teachers Promotion Exam : ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பதவி உயர்விற்கு தகுதி தேர்வு கட்டாயமா என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகள்

ஆசிரியர்கள் தான் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பதவி உயர்வு, பணி நியமனம் என பல கோரிக்கைகள் அடங்கியுள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணி விதிமுறைகள் என்பது ஏற்கனவே வகுக்கப்பட்டு இருக்கின்றன. அதில் அவ்வப்போது மாற்றங்கள் செய்து அரசிதழ் வெளியிடப்படுகிறது . அந்த வகையில் ஆசிரியர்களுக்கான பணி விதிமுறைகளில் மாற்றம் செய்து பல்வேறு அறிவிப்புகள் அடங்கிய அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.. கடந்த ஜூன் 3ஆம் தேதியிட்ட அந்த அரசிதழில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை எனவும்,

பள்ளிக்கல்வித்துறையில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் போது, 18 % தொடக்க கல்வித்துறையில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியாக அரசாணைகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி உயர்விற்கு தகுதி தேர்வு கட்டாயமா.?

இந்த நிலையில், ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமா இல்லையா என குழுப்பபமான நிலை நீடித்த நிலையில், பள்ளி கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார். ஆசிரியர்களின் பணி விதிமுறைகள் குறித்த அரசிதழில் குறிப்பிட்ட சில ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவை என நேரடியாக குறிப்பிடவில்லை .

அதே நேரத்தில், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட சில ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என நேரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்வு தகுதி தேவையில்லை என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை

மே 29  ம் தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் கிடைக்காத நிலையில், பணி விதிகள் அறிவிக்கப்பட்டன. எனினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, TET தேர்வு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அஞ்சுமன் இஷாத்-இ-தாலீம் அறக்கட்டளை- மகாராஷ்டிர அரசு வழக்கில், 29 மே 2026 அன்று வழங்கப்பட்ட மறு ஆய்வுத் தீர்ப்பு, பதவி உயர்வுகளுக்கு TET பொருந்தும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget