மேலும் அறிய

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?

 முதல்‌ பரிசு பெறும்‌ மாணவர்கள்‌ சென்னையில்‌ நடைபெறும்‌ மாநிலப்‌ போட்டியில்‌ கலந்து கொள்ளும்‌ வாய்ப்பினை பெறுவர்‌.

தமிழ்நாடு நாள்‌ ஆன ஜூலை 18 அன்று பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மாநில அளவில் நடைபெற்று, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 

இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:

’’தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌, தாய்த்‌ தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ பெயர்‌ சூட்டிய சூலை 18 ஆம்‌ நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும்‌ என அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பிற்கு இணங்க 2022ஆம்‌ ஆண்டு முதல்‌ தமிழ்நாடு நாள்‌ விழா சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகிறது.

சென்னையில்‌ நடைபெறும்‌ மாநிலப்‌ போட்டியில்‌ கலந்து கொள்ளும்‌ வாய்ப்பு

தமிழ்நாடு நாள்‌ விழா தொடர்பில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌, 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும்‌ பேச்சுப்‌ போட்டிகள்‌ நடத்தி முதல்‌ மூன்று பரிசுகள்‌ மாவட்ட அளவில்‌ வழங்கப் பெறுகிறது. அத்துடன் முதல்‌ பரிசு பெறும்‌ மாணவர்கள்‌ சென்னையில்‌ நடைபெறும்‌ மாநிலப்‌ போட்டியில்‌ கலந்து கொள்ளும்‌ வாய்ப்பினை பெறுவர்‌.

சென்னையில்‌ நடைபெறும்‌ மாநிலப்‌ போட்டியில்‌ கலந்து கொண்டு முதல்‌ மூன்று இடம்‌ வகிக்கும்‌ மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம்‌ நாளன்று நடைபெறும்‌தமிழ்நாடு நாள்‌ விழாவில்‌ பரிசு மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்‌ வழங்கிச்‌ சிறப்பிக்கப்‌ பெற்று வருகிறது‌.

சென்னை மாவட்ட அளவில்‌ நடைபெறும்‌ மாவட்டப்‌ போட்டிகள் 09.07.2024 அன்று சென்னை, அண்ணாசாலையில்‌ அரசினர்‌ மதரசா ஐ ஆஜம்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெறவுள்ளன.

முதல் பரிசு ரூ.10,000

இப்போட்டிகளில்‌ வெற்றி பெறும்‌ மாணவர்கள், முதல்‌ பரிசு ரூ.10,000/- இரண்டாம்‌ பரிசு ரூ.7,000/-, மூன்றாம்‌ பரிசு ரூ.5,000/- மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்‌ வழங்கிச்‌ சிறப்பிக்கப்‌ பெறுவர்‌.

போட்டிகளுக்கான தலைப்புகள்‌

கட்டுரை- ஆட்சிமொழி தமிழ்

பேச்சுப் போட்டி

1. குமரி தந்தை மார்ஷல் நேசமணி

2. தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர்‌ அண்ணா

3. முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ கருணாநிதி.

இதில் திரளான மாணவர்கல் கலந்துகொள்ள வேண்டும். ’’

இவ்வாறு தமிழ்‌ வளர்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.‌

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!
சட்டக் கல்வி பயில அரிய வாய்ப்பு! புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் அப்ளிகேஷன் ஓபன்... உடனே அப்ளை பண்ணுங்க!
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K Bhagyaraj: நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
Maruti Micro SUV: டாடா பஞ்ச்சுக்கு நெருக்கடி.! புதிய க்யூட்டான மைக்ரோ SUV-ஐ களமிறக்கும் மாருதி; விலையும் குறைவு.?
டாடா பஞ்ச்சுக்கு நெருக்கடி.! புதிய க்யூட்டான மைக்ரோ SUV-ஐ களமிறக்கும் மாருதி; விலையும் குறைவு.?
Embed widget