மேலும் அறிய

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான பொறியாளர், வரைவு அலுவலர்கள்; 4 மாதமாக வழங்கப்படாத பணி நியமனம்- எழும் கேள்விகள்

குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலைப் பொறியாளர்கள், இளநிலை வரைவு அலுவலர்கள் ஆகியோருக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர், வரைவு அலுவலர்களுக்கு 120 நாட்களுக்கு மேலாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் தாமதிப்பது ஏன் என்று பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ல எக்ஸ் பதிவுகள்:

‘’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு இளநிலைப் பொறியாளர்கள் 49 பேர், இளநிலை வரைவு அலுவலர்கள் 49 பேர் என மொத்தம் 98 பேர் போட்டித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு 120 நாட்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்குவதில் செய்யப்படும் தாமதம் பல வகையான ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுத் தரப்பில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை அலுவலர் பணிகளுக்கு 1230 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் வெளியிடப்பட்டு, மே 27-ஆம் நாள் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.  அதன் முடிவுகள்  செப்டம்பர் 19-ஆம் நாள் வெளியிடப்பட்டு, அதனடிப்படையில்  2024 ஏப்ரல் 3-ஆம் நாள் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஒவ்வொரு பணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன.  

சிலருக்கு வரும் வழங்கப்படாதது ஏன்?

1230 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவர்களில் 1132 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டு விட்டனர். ஆனால், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலைப் பொறியாளர்கள், இளநிலை வரைவு அலுவலர்கள் ஆகியோருக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை அலுவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகி விட்டது; முடிவுகள் வெளியிடப்பட்டு 11 மாதங்களாகி விட்டன. கலந்தாய்வு முடிந்து பணி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு 120 நாட்களாகி விட்டன.

ஆனாலும் இன்னும் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் இன்னும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.  அதனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணி ஆணைகள் முறைகேடாக வேறு எவருக்கேனும் வழங்கப்பட்டு விடுமோ? என்ற அச்சமும் அவர்களை வாட்டுகிறது.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி  என்பது பெருங்கனவு ஆகும். அதற்காக பல ஆண்டுகளாக தயாரானவர்களுக்கு, தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படாதது எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களின் வேதனைக் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை வரைவு அலுவலர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget