மேலும் அறிய
Education loan: சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம்; மாணவர்களே உடனே அப்ளே பண்ணுங்க !
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம்.

கல்லூரி மாணவர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் மருதுபாண்டியர் பள்ளி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெரும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் பள்ளி கலையரங்கத்தில் வருகின்ற 05.10.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள்.
லோன் வாங்க என்ன ஆவணங்கள் தேவை தெரியுமா?
மேலும், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி Joint account பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
அனைத்து ஊராட்சி ஒன்றியத்திலும் நடைபெறவுள்ளது !
இம்முகாமில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து கடன் ஆணைகள் வழங்கப்படும். அதுமட்டுமன்றி, இக்கல்வி கடன் முகாமானது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியத்திலும் நடைபெறவுள்ளது. இதனை மாணாக்கர்கள் பயன்படுத்திக்ககொண்டு, இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் வேலை வாய்ப்பு முகாம் எப்போது தெரியுமா?
அதே போல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 05.10.2024 அன்று சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், பல்வேறு திறன் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவைகளும் வழங்கப்படும். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் பங்கேற்று பயன்பெறலாம், எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Airport : துவங்கியது மதுரை விமான நிலையம் 24 மணிநேர சேவை.. தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.! ஏன் ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்யவில்லை.?
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement