மேலும் அறிய

படிங்க படிங்க படிச்சுக்கிட்டே இருங்க .... 2,000 மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்ப்பு

வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க 2 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க 2 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 5 புதிய நூலகங்கள் அமைக்க இடங்கள் தேர்வு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் இயங்கும் முழு நேர நூலகங்கள்

தர்மபுரி மாவட்டத்தில், ஒரு மாவட்ட மைய நூலகம், 6 முழுநேர நூலகங்கள், 27 கிளை நூலகங்கள், 69 ஊர்புற நூலகங்கள், 33 பகுதி நேர நூலகங்கள், ஒரு நடமாடும் நூலகம் என மொத்தம் 137 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் 24.07 லட்சத்திற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. 10 ஆயிரம் வாசகர்கள் நாளிதழ், புத்தகங்கள் படித்து செல்கின்றனர்.

சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகின்றனர்

புரவலர்களாக 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். நூலக உறுப்பினர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். மாவட்ட மைய நூலகத்தில் மட்டும் 1.62 லட்சம் புத்தகங்கள் உள்ளன. இங்கு பொதுஅறிவு, வரலாறு, அரசியல், நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியம், சிறுவர்கள், மகளிருக்கு என தனி நூல்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ் என போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்நூலகத்திற்கு தினசரி 500 முதல் 600 வாசகர்கள் வருகின்றனர். நன்கொடையாளர்கள், புரவலர்கள் என 256 பேர் உள்ளனர். மாவட்ட மைய நூலகம் 2 தளத்துடன் இயங்கி வருகிறது.

மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் நூலகங்கள் அமைக்க திட்டம்

இந்நிலையில், மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனைகள், வாரச்சந்தை பகுதி என 5 இடங்களில் புதிய நூலகங்கள் அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. அரூர், பென்னாகரம் பஸ் நிலையம் அருகே நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இளம்வயதினரிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முயற்சி

பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்கம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளை வாசிப்பு திறன் ஏற்படுத்தும் விதமாக பொ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 300 பேரும், குள்ளனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 மாணவர்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் மாணவ, மாணவிகள், நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களை நூலகத்தில் உறுப்பினராக சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி கூறுகையில்:-

தமிழகத்தில் 100 நூலகங்கள் புதியதாக அமைக்கப்பட உள்ளது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் 5 நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது. பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து, மாணவர்களை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதுவரை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது தர்மபுரி மாவட்டத்தில் வாசிப்பு பழக்கம் மிகவும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது

தற்போதைய காலகட்டத்தில் வாசிப்பு பழக்கம், மிகவும் அரிதாகி கொண்டே இருக்கிறது. வாசிப்பு பழக்கம் அதிகம் உள்ளவர்கள் நிச்சயம் வெற்றியாளர்களாக இருப்பார்கள். வெற்றியாளர்களிடம் வாசிப்பு பழக்கம் நிச்சயம் இருக்கும். இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது, இதனை பிரிக்க முடியாது,’ என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget