மேலும் அறிய

Professor promotion: பல்கலை. மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏன்?- அன்புமணி கேள்வி

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்தக் கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்தக் கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

''பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர்களுக்கான மூத்த பேராசிரியர் பதவி உயர்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதியாகும்!

10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இதற்கு தகுதியானவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பார்கள். பதவி உயர்வை தாமதப்படுத்தினால் அவர்களுக்கு பணிநிலை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும்!

மூத்த பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து 6 மாதங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததால், அதற்காக விண்ணப்பித்த 14 பேராசிரியர்களில் 10 பேர் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்று விட்டனர்.

பதவி உயர்வுக்கான தேர்வுக்குழுவில் ஆளுனர் மற்றும் அரசு பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது தான் இந்த தாமதத்திற்கு காரணம் ஆகும்.  அவர்களை உடனடியாக நியமித்து தகுதியான பேராசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல்  வழங்க வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதவி உயர்வில் உள்ள சிக்கல்கள் குறித்து ராமதாஸ் பேசி இருந்தார். அதில், ''தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், எந்த பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 6000-க்கும் கூடுதலான ஆசிரியர்களும் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் கூட, அரசுத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தமிழக அரசின் நிதி நெருக்கடி தான் ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கான காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தக் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, பிற அரசுத்துறையினருக்கான பதவி உயர்வுகள் மறுக்கப்படாத நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கு மட்டும் பதவி உயர்வையும், தர ஊதிய உயர்வையும் வழங்க மறுப்பது நியாயம் அல்ல. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதற்கு நிதி நெருக்கடியைக் கடந்து நடைமுறைச் சிக்கல்களும் முக்கியக் காரணம் ஆகும். பிற அரசுத்துறையினருக்கு காலம் சார்ந்து தானாக பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் தங்களுக்கான பதவி உயர்வை தங்களின் செயல்பாட்டு சாதனைகளுடன் விண்ணப்பித்து அதனடிப்படையில் தான் பெற முடியும். இந்நடைமுறை பணி மேம்பாட்டுத் திட்டம் (Career Advancement Scheme) என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

Professor promotion: பல்கலை. மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏன்?- அன்புமணி கேள்வி

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்களில் பணி மேம்பாட்டுத் திட்டக்குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து தீர்மானிக்கும். கல்லூரிகளைப் பொறுத்தவரை மண்டல இணை இயக்குனர் இது பற்றி முடிவெடுப்பார். ஆனாலும், கடந்த ஐந்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது சரி செய்யப்பட வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது அவர்களின் பணி நிலையையும், ஊதியத்தையும், பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தையும் கடுமையாக பாதிக்கும். கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, படிநிலை சார்ந்த பதவி உயர்வு என்பது கவுரவம் சார்ந்த விஷயமும் ஆகும்.

கடந்த சில பத்தாண்டுகளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்கள் சராசரியாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடக்கின்றன. ஒருவர் முனைவர் பட்டம் அல்லது தேசிய/ மாநிலத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று உதவிப் பேராசிரியர் பணியில் சேர 35 முதல் 40 வயதாகிவிடும்.

உதவிப் பேராசிரியராக பணியில் சேரும் ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு 16 ஆண்டுகள் ஆகும். 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் மூத்த பேராசிரியராக பதவி உயர்த்தப்படுவார். கடந்த காலங்களில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருபவர்கள் எளிதாக மூத்த பேராசிரியர் நிலையை அடைந்து ஓய்வு பெற முடியும். ஆனால், இப்போது போதிய அளவில் பணி நியமனங்கள் நடக்காததால் பணியில் சேர அதிக வயது ஆவது, பதவி உயர்வில் செய்யப்படும் தாமதம் ஆகியவற்றால் பேராசிரியர் என்ற நிலைக்கு உயர்வதே மிகவும் கடினமாக இருக்கிறது. மூத்தப் பேராசிரியர் என்ற நிலையை அடைவது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணம் பதவி உயர்வு வழங்கப்படாததுதான்'' என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget