மேலும் அறிய
Advertisement
Madras University: புயலால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள்: புதிய தேதிகளை அறிவித்த சென்னை பல்கலைக்கழகம்
'மிக்ஜாம்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
'மிக்ஜாம்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், வெள்ளம் சூழ்ந்து நிலைகுலைந்து போயின.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழை கோரத் தாண்டவம் ஆடிய நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
அதேபோல திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செமஸ்டர் தேர்வுகள், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதன்படி பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. டிசம்பர் 4ஆம் தேதி தொடங்குவதாக இருந்த செமஸ்டர் தேர்வு, டிசம்பர் 11ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முடிவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 17ஆம் தேதி முடிவடைகின்றன.
டிசம்பர் 11 முதல் செமஸ்டர் தேர்வுகள்
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தத் தேர்வுகள் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தன. இந்தத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு unom.ac.in என்ற இணையதளத்தை காணலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: Cyclone Michaung: புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட பள்ளிகள்; சீரமைப்புக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கிய பள்ளிக் கல்வித்துறை
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion