மேலும் அறிய

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டில் புது விதிமுறை - முக்கிய அறிவிப்பு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஆங்கில வழி ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி விடைத்தாளும், தமிழ் வழி ஆசிரியர்களுக்கு தமிழ்வழி விடைத்தாளும் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டில் ஆங்கில வழி ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி விடைத்தாளும், தமிழ் வழி ஆசிரியர்களுக்கு தமிழ்வழி விடைத்தாளும் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக இணை இயக்குநர்‌ நரேஷ்‌, அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 10ஆம் வகுப்பு 2024 பொதுத் தேர்வு மதிப்பீட்டுப்‌ பணியில் விடைத் தாள்‌ எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. அதில் மேலும் கூறி உள்ளதாவது:

’’மார்ச்‌ / ஏப்ரல்‌ 2024 இடைநிலைப்‌ பள்ளி விடுப்புச்‌ சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும்‌ அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள்‌ மதிப்பீட்டு முகாம்களில்‌ தங்கள்‌ மாவட்டத்தில்‌ தேர்வெழுதிய மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப விடைத் தாட்கள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வெண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டுப்‌ பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின்‌ எண்ணிக்கையினை சரியாகக்‌ கணக்கிட்டு பாடவாரியான / பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம்‌ பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பீட்டில் புது முறை

மேலும்‌, தமிழ்‌ வழியில்‌ போதிக்கும்‌ ஆசிரியர்கள்‌ தமிழ்வழி விடைத்தாட்களையும்‌, ஆங்கில வழியில்‌ போதிக்கும்‌ ஆசிரியர்கள்‌, ஆங்கிலவழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்‌ என்ற விதிமுறை பின்பற்றத்தக்க வகையில்‌, தங்கள்‌ மாவட்டத்தில்‌அமையும்‌ மதிப்பீட்டு முகாமில்‌ பெறப்படும்‌ பயிற்று மொழி வாரியான விடைத்தாள்களின்‌ எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில்‌ ஆங்கிலம்‌, தமிழ்‌ வழிகளில்‌ பயிற்றுவிக்கும்‌ ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம்‌ செய்து அனுப்பிட வேண்டும்‌.

மதிப்பீட்டுப்‌ பணி குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள்‌ திட்டமிட்டு தொய்வில்லாமலும்‌, கால தாமதமில்லாமலும்‌ நடைபெற வேண்டும்‌. மேற்படி மதிப்பீட்டுப்‌ பணியினை மேற்கொள்ள தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள்‌ / அரசு நிதிஉதவி பெறும்‌ பள்ளிகள்‌ / தனியார்‌ (மெட்ரிக்‌ / ஆங்கிலோ இந்தியன்‌) பள்ளிகள்‌ அனைத்தில் இருந்தும்‌ பத்தாம்‌ வகுப்பு போதிக்கும்‌ தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல்‌ பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம்‌ செய்து மதிப்பீட்டுப்‌ பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. எந்தவொரு பள்ளியிலிருந்தும்‌ ஆசிரியர்கள்‌ விடுபடாது வருவதைக் கண்காணித்தல்‌ வேண்டும்‌.

ஆசிரியர்களின்‌ மொத்த எண்ணிக்கைப்‌ பட்டியலைத் தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள்‌ விடுபடாமல்‌ வரவழைத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ ஒரு கல்வி மாவட்டத்தில்‌ இரு முகாம்கள்‌ அமைக்கப் பெற்றிருப்பின்‌ இரு முகாம்களின்‌ தேவைக்கேற்ப விடைத்தாள்‌ மதிப்பீட்டுப்‌ பணிக்கு எவ்விதக் குந்தகமும்‌ ஏற்படாமல்‌ தகுதி வாய்ந்த ஆசிரியர்களை (CE, AE‌, SO & MVO) சரிவரப் பிரித்து ஒதுக்கீடு செய்திடுமாறு தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

மதிப்பீட்டுப்‌ பணிக்கு நியமனம்‌ செய்யப்படும்‌ ஆசிரியர்களுக்கு 11.04.2024-க்குள்‌ நியமன ஆணையினை தவறாமல்‌ வழங்க வேண்டும்’’. 

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
Vanni Arasu: ”ஆ.ராசா = எச்.ராஜா” .. அமைச்சர் பிறப்பு குறித்து சர்ச்சை பேச்சு.. வெளுத்து வாங்கிய வன்னி அரசு!
Vanni Arasu: ”ஆ.ராசா = எச்.ராஜா” .. அமைச்சர் பிறப்பு குறித்து சர்ச்சை பேச்சு.. வெளுத்து வாங்கிய வன்னி அரசு!
CM Vijay London Tour : ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை கொண்டு வருவாரா விஜய்? – லிஸ்ட் போட்டு TRB ராஜா கேள்வி
ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை கொண்டு வருவாரா விஜய்? – லிஸ்ட் போட்டு TRB ராஜா கேள்வி
Rasi Palan Today (13-09-2026): இன்று கடகத்துக்கு செம லாபம்.. உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-09-2026): இன்று கடகத்துக்கு செம லாபம்.. உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
September 17 Holiday : செப்டம்பர் 17-ல் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- வெளியான அறிவிப்பு
செப்டம்பர் 17-ல் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- வெளியான அறிவிப்பு
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget