மேலும் அறிய

10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை பார்வையிட்ட கோவை ஆட்சியர் பவன்குமார்

தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 11) தொடங்கியது. இந்தத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 159 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 509 பள்ளிகளை சேர்ந்த 18,861 மாணவர்கள் மற்றும் 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 1,237 தனித்தேர்வர்களும் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.

சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை

தேர்வுகள் சீராக நடைபெற மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்க 11 பாதுகாப்பு மையங்களில் 22 அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தேர்வு நாள்களில் 47 வழித்தடங்கள் மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன. தேர்வு மையங்களில் ஒழுங்காக தேர்வு நடைபெற 159 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2,075 அறைக் கண்காணிப்பாளர்கள், 250 நிலையான மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், 316 அலுவலக பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் 946 ஆசிரியர்கள் (ஸ்கிரைப்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளியில் நடைபெற்று வரும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொதுத்தேர்வை முன்னிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கோவை மாவட்டத்தில் உள்ள சிலிண்டர் ஏஜென்சி நிர்வாகிகளுடன் கடந்த சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், தற்போது மாவட்டத்தில் உடனடி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்றும் கூறினார். தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அத்தகைய நிலை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்திய மாணவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அனைத்து பள்ளிகளிலும் சமையல் அறைகள் மற்றும் வளாகங்களை முழுமையாக சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், பள்ளிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget