மேலும் அறிய

Chennai Flood: மிரட்டும் புயலால் இன்று முதல் டிச.9 வரையான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலை. அறிவிப்பு

வளாகக் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் வழங்கப்படும் ரெகுலர் மற்றும் தொலைதூரப் படிப்புகளுக்கு இன்று (டிச.3) முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன. 

மிரட்டும் மிக்ஜாக் புயலால், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயல் அதன் தாக்குதலை தொடங்கி விட்ட நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பியுள்ளன என தமிழக நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாளை பொது விடுமுறை

முன்னதாக மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 5.12.2023 நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் வழங்கப்படும் ரெகுலர் மற்றும் தொலைதூரப் படிப்புகளுக்கு இன்று (டிச.3) முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன. 

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

எனினும் கன மழை காரணமாக, தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இதற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
"அரசாங்கமாவது, விதியாவது!" - தனியார் பள்ளி முதல்வர் ஆவேச பேச்சு; சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த RTE கட்டணக் கொள்ளை!
சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !
சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !
JEE Advanced: ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வரலாற்று சாதனை:  10 ஆயிரம்+ மாணவிகள் தேர்ச்சி!
JEE Advanced: ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வரலாற்று சாதனை:  10 ஆயிரம்+ மாணவிகள் தேர்ச்சி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Online Deed Registration : இனி பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! அசத்தலான திட்டம்-ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? இதோ வழிமுறை
இனி பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! அசத்தலான திட்டம்-ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? இதோ வழிமுறை
Minister Nirmal Kumar : திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசிய தவெக அமைச்சர்..! வைரலாகும் நிர்மல் குமாரின் பழைய வீடியோ
திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசிய தவெக அமைச்சர்..! வைரலாகும் நிர்மல் குமாரின் பழைய வீடியோ
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Embed widget