மேலும் அறிய

Veer Gatha Project 2.0: வீரகதை 2.0: விண்ணப்பிக்க ரெடியா? பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும் டெல்லி செல்லும் வாய்ப்பும்

வீர கதை 2.0 போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது.

வீர கதை 2.0 போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு டெல்லி செல்லவும், தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு பெறவும் முடியும். 

வீர கதை

வீர தீர விருதுகள் பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் தீரத்தையும் உலகறியச் செய்யவும் மாணவர்கள் மத்தியில் பரப்பவும் வீர கதை என்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன்மூலம் ஆண்டுக்கு இரு முறை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் வழங்கப்படும் விருதுகள் பற்றியும் விருதாளர்களின் வீரச் செயல்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். 

வீர கதை 1.0 ஆகஸ்ட் 2021 முதல் ஜனவரி 2022 வரை நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி  வீர கதை 1.0 திட்டத்தின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 


Veer Gatha Project 2.0: வீரகதை 2.0: விண்ணப்பிக்க ரெடியா? பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும் டெல்லி செல்லும் வாய்ப்பும்

இந்நிலையில் வீர கதை 2.0 போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு டெல்லி செல்லவும், தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு பெறவும் முடியும்.  இதில் மாணவர்கள் கட்டுரை, கவிதை, ஓவியம், வரைபடம் ஆகிய படைப்புகளை மேற்கொள்ளலாம். 

6 முதல் 10ஆம் வகுப்பு வரை ஒரே தலைப்புதான் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கதை, கவிதை, கட்டுரைகளை 300 வார்த்தைகளில் எழுத வேண்டும். அதேபோல ஓவியம், வரைபடம், வீடியோ வடிவிலும் தங்களின் படைப்புகளை அனுப்பலாம். 

9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கதை, கவிதை, கட்டுரைகளை 750 வார்த்தைகளில் எழுத வேண்டும். அதேபோல ஓவியம், வரைபடம், வீடியோ வடிவிலும் தங்களின் படைப்புகளை அனுப்பலாம். 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தங்களின் படைப்புகளை உருவாக்க 1000 வார்த்தைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பங்கேற்பது எப்படி?

மாணவர்கள் cbse.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். 

அதில் latest @cbse என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும். 

அந்தப் பக்கத்தில் Project Veer Gatha Edition-2 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

click here to apply என்ற தெரிவை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம்.


Veer Gatha Project 2.0: வீரகதை 2.0: விண்ணப்பிக்க ரெடியா? பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும் டெல்லி செல்லும் வாய்ப்பும் 

முன்னதாக பாதுகாப்பு அமைச்சகம், பள்ளி மாணவர்கள் மத்தியில் தீர விருதுகள் பெற்ற விருதாளர்கள் குறித்த விழிப்புணர்வை செயல்திட்டங்கள் வழியாக ஏற்படுத்தும் யோசனையை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம், மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைந்து, வீர கதை 1.0 திட்டத்தை ஆரம்பித்தது. 

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். 

ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 4 சிறந்த படைப்புகளை சிபிஎஸ்இ தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் இருந்து 25 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும், அவர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு அளிக்கப்படும். அவர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு டெல்லி அழைத்துச் செல்லப்படுவர். சிபிஎஸ்இ தளத்தில் பதிவு செய்யப்பட்ட படைப்புகள் அனைத்துக்கும் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget