மேலும் அறிய

பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7 மாத ஊதிய பாக்கி: உடனே வழங்க வலியுறுத்தல்

மாணவர்களுக்கு கற்பித்தல் எனும் புனிதப் பணியை செய்யும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாமாதம் தாமதமின்றி ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் அதை உடனே வழங்க அரசு நடவடிக்கை வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 116 கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக உயர் கல்வித்துறை செயலாளருக்கு அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நிலையான பேராசிரியர்களுக்கும், உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் நிலையான ஆசிரியர்களுக்கும், சில குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் தடையின்றி வழக்கம் போல ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சுயநிதிப் பிரிவுகளாகத் தொடங்கப்பட்ட துறைகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும்தான் ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களின் ஊதியத்தை அரசு வழங்குவதா, பல்கலைக்கழகம் வழங்குவதா? என்பதில் எழுந்துள்ள சிக்கல்தான் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு காரணம் ஆகும்.

சுயநிதி பாடப்பிரிவுகள்


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இந்த 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தபோது, அவற்றில் அரசின் நிதியுதவி கிடைக்காத பல பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. அப்போது அவர்களுக்கான ஊதியம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.  இந்த உறுப்புக் கல்லூரிகள் சில ஆண்டுகளுக்கு முன் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகு நிலையான ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் துறைகளின் ஆசிரியர்கள் ஆகியோருக்கான ஊதியத்தை அரசே ஏற்றுக் கொண்டது. ஆனாலும், சுயநிதி பாடப்பிரிவுகளின் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழகமே தொடர்ந்து ஊதியம் வழங்கி வந்தது. இப்போது 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான மோதலில் கவுரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவானது. ஒரு மாதத்திற்கான ஊதியத்தைக் கொண்டு அந்த மாதத்திற்கான செலவுகளையே அவர்களால் சமாளிக்க முடியாது எனும் போது, 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் எவ்வாறு குடும்பச் செலவுகளை கவனிக்க முடியும்?  என்பதை அரசும், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் சிந்தித்து பார்க்க வேண்டும். 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்  விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றிய முருகானந்தம் என்ற கவுரவ விரிவுரையாளர் அவரது சிகிச்சைக்குக் கூட காசு இல்லாமல் தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம்.

மாணவர்களுக்கு கற்பித்தல் எனும் புனிதப் பணியை செய்யும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாமாதம் தாமதமின்றி ஊதியம் வழங்கப்பட வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பேசியோ அல்லது அரசே நிதி ஒதுக்கியோ 116 கவுரவ விரிவுரையாளர்களுக்கும்  வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். இம்மாதம் முதல் அவர்களுக்கு கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
Manali Oil Godown Blast: 60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
60 அடி உயரத்திற்கு வெடித்துச் சிறதறிய எண்ணெய் பேரல்கள்; மணலி புது நகர் அருகே பயங்கர தீ விபத்து.!
ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
Iran on Hormuz: நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
Arun IPS : ’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
Embed widget