(Source: ECI/ABP News/ABP Majha)
Nan Mudhalvan Scheme: மத்திய அரசுப்பணிக்கு இலவசப் பயிற்சி: நான் முதல்வன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Nan Mudhalvan Scheme Free Training: தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படுகிறது.
எஸ்.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஐ.பி.பி.எஸ். எனப்படும் வங்கித்துறை மற்றும் ரயில்வே துறைகளின் போட்டித் தேர்வுகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த நிலையில், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு கடந்தாண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உண்டு, உறைவிட வசதியோடு 6 மாத காலப் பயிற்சி
மத்தியப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள நபர்கள், விண்ணப்பிக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இதற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரம்
விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 29 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02.08.1995 க்கு முன் பிறந்தவராக இருக்க கூடாது. வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
ஜூன் 8ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இன்று வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 9ஆம் தேதி இதற்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. ஜூலை 14ஆம் தேதி இவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தேர்ச்சி பெறுவோருக்கு இலவச உறைவிடப் பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
https://naanmudhalvan.tn.gov.in/reportsmedia/landing_data/Text_97d06141_Notification_for_SSC_Banking_Entrance_Exam_-_DRAFT[1].pdf என்ற அறிவிக்கையைப் படித்து போதிய விவரங்களை அறிந்துகொள்ளலாம். இதிலேயே பாடத்திட்டம், தேர்வு முறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
https://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exams என்ற இணைப்பை க்ளிக் செய்து, முதலில் முன்பதிவு செய்துகொண்டு, பிறகு விண்ணப்பிக்கலாம்.
தொலைபேசி எண்: 9043710214 / 9043710211
மின்னஞ்சல் முகவரி: nmssc_banking@naanmudhalvan.in
கூடுதல் விவரங்களுக்கு: https://www.naanmudhalvan.tn.gov.in/