மேலும் அறிய

Semester Exams Postponed: பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள்: புதிய அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலை.

டிசம்பர் 4ஆம் தேதி தொடங்குவதாக இருந்த செமஸ்டர் தேர்வு, டிசம்பர் 11ஆம் தேதி தொடங்குகிறது.

மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், வெள்ளம் சூழ்ந்து நிலைகுலைந்து போயின.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழை கோரத் தாண்டவம் ஆடிய நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

இதற்கிடையில், ஐந்தாவது நாளாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (8.12.2023) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. டிசம்பர் 4ஆம் தேதி தொடங்குவதாக இருந்த செமஸ்டர் தேர்வு, டிசம்பர் 11ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முடிவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 17ஆம் தேதி முடிவடைகின்றன.

இந்த புதிய அட்டவணை தன்னாட்சி பெறாத அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். தன்னாட்சி பெற்ற, தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களுக்கான பாடத்திட்டம், தேர்வு ஆகியவற்றைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவர்கள் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக திருத்தி அமைக்கப்பட்ட மற்றும் முழுமையான தேர்வு அட்டவணையை https://aucoe.annauniv.edu/downloads/reschedule_nov_2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: https://aucoe.annauniv.edu/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Embed widget