Engineering New Syllabus: 20 ஆண்டுக்குப் பின் மாறும் பொறியியல் பாடத்திட்டம்: ஆக.18-ல் வெளியாகிறது- முக்கிய அம்சங்கள் என்ன?
மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுக்குப் பிறகு பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாறுகிறது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பொறியியல் பாடத்திட்ட மாற்றம் நடப்புக் கல்வியாண்டிலேயே (2022- 23) அமலாக உள்ளது.
ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற திறன்களை அவர்கள் கொண்டிருக்காததுதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழில் துறையினரின் தேவைக்கும் மாணவர்களின் திறனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைகிறது.
தேவைக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப புதிய பொறியியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்துக்கு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தொழில் துறையினரின் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், தொழில்முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுவதாக விளக்கமளித்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் பொறியியல் பாடத்திட்டம், நடப்பு கல்வியாண்டு முதல் அமலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், தொழிற் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், தொழில்முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுகிறது.
புதிதாக அறிமுகம் செய்யும் திறன் சார்ந்த பாடத்திட்டத்தை உருவாக்க, 150 தொழில் நிபுணர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆக. 12ஆம் தேதி நடத்தப்பட உள்ள கல்வி குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்து இன்று (ஆக. 8ஆம் தேதி) இறுதி முடிவெடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
சராசரி மாணவர்களும் பயன்பெறலாம்
சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் பாடத்திட்டம் இருக்கும் எனவும் அவர்களும் பயன்பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் பொறியியல் பாடத்திட்டம், நடப்பு கல்வியாண்டு (2022- 23) முதல் அமலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்