மேலும் அறிய

All pass | குறுக்கே வந்த ஒமிக்ரான்... இந்த முறையும் ஆல்பாஸ்..!? என்ன திட்டமிடுகிறது பள்ளிக் கல்வித்துறை?

இரண்டு மாதங்களே பள்ளிகள் இயங்கிய நிலையில், கொரோனா காரணமாக நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றித் தேர்ச்சி வழங்கப்பட்டது.  

தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டு வழக்கமாகத் தொடங்கும் 2021  ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும் கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

கொரோனா 2-வது அலை

கொரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிப்.8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கின. எனினும் கொரோனா 2-வது அலை திடீரெனத் தாக்கியது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன. 

2020-21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி தேர்ச்சி வழங்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு, இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டு ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. செப்.1 முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நேரடி வகுப்புகளில் சுழற்சி முறையில் இயங்கி வந்தன. கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்த நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வந்தன.

வேகமெடுக்கும் ஒமிக்ரான் தொற்று

தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமெடுத்து வருவதால், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு மாதங்களே பள்ளிகள் இயங்கிய நிலையில், கொரோனா காரணமாக நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொற்று பாதிப்பைப் பொறுத்து மேலும் நீட்டிக்கப்படலாம். இதனால் இந்த ஆண்டும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதே நேரத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ration Card Suspension : நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
நாளை முதல் ரேஷன் கார்டு முடக்கம்.! இனி பொருட்கள் வாங்க முடியாது.? எந்த எந்த கார்டு.? லிஸ்ட் இதோ..
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை...! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?
Senthil Balaji DMK : தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
Annamalai : சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை
சிஎம் விஜய்யின் சில நிமிடப் பிரச்சாரத்திற்காகப் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?- சீறும் அண்ணாமலை
Movie Release: விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய்யின் மகன் சஞ்சய்.. இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீசா?
Movie Release: விஜய் சேதுபதியுடன் மோதும் விஜய்யின் மகன் சஞ்சய்.. இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீசா?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு அதிகரித்தது.? விலை நிலவரம் இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு அதிகரித்தது.? விலை நிலவரம் இதோ..
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
TN RAIN ALERT : மக்களே குடையுடன் தயாராகுங்கள்! 2 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகிறது- எந்த எந்த மாவட்டம்- லிஸ்ட் இதோ..
மக்களே குடையுடன் தயாராகுங்கள்! 2 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகிறது- எந்த எந்த மாவட்டம்- லிஸ்ட் இதோ..
Embed widget