மேலும் அறிய

ABP Exclusive: டிசிஎஸ் அதிர்ச்சி: வேலைக்கு சேர்ந்த 5 நாட்களில் ராஜினாமா செய்ய நிர்பந்தம்! இளைஞரின் பகீர் அனுபவம்!

வேலைக்குச் சேரும்போதே இவை அனைத்தையும் டிசிஎஸ் நிறுவனத்தில் கூறி இருந்தேன். அப்போதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றவர்கள், இப்போது அதைக் காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பினர்.

முன்னாள் டிசிஎஸ் ஊழியர் ஒருவர், தான் வேலைக்குச் சேர்ந்த 5 நாட்களுக்கு உள்ளாகவே தான் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது வேலைநீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற அச்சுறுதலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து ஏபிபி இடம் பேசிய அவர், ’’டிசிஎஸ் நிறுவனத்தின் எச்ஆர், 2 ஆப்ஷன்களை மட்டுமே முன்வைத்தார். நான் 2025 எம்பிஏ பட்டதாரி. நான் டிசிஎஸ் எம்பிஏ ஹைரிங் மூலம் வேலைக்குச் சேர்ந்தேன். டிசிஎஸ் நிறுவனத்தில் நண்பர்கள் பலர் பணிபுரிந்து வந்ததால், நானும் அங்கேயே வேலை செய்ய ஆசைப்பட்டேன்.  பல நூறு மைல்கள் அலைந்து திரிந்து, வேலைக்கான தேர்வுகளில் கலந்துகொண்டேன்.

கிடைத்த அழைப்புக் கடிதம்; தொடங்கிய பயிற்சி

இறுதியாக கிரேட் சி1-ல் Assistant System Analyst ஆகப் பணியில் சேர்ந்தேன். அழைப்புக் கடிதம் கிடைத்து, அனைத்து ஃபார்மாலிட்டிகளையும் முடித்தேன். அப்போதுதான் ஆரம்பகட்ட கற்றல் பயிற்சியுடன் தொடங்கி இருந்தது. திடீரென ஹெச்ஆர் என்னை அழைத்தார். ’’உங்களுடைய பின்னணி சரிபார்ப்பு அறிக்கை (BGC) சரியாக இல்லை'' என்றார்.  

முன்னதாக நான் பணிபுரிந்த நிறுவனம் திவாலாகி முற்றிலுமாக மூடப்பட்டது. அங்கு மனிதவளம் மேலாளர் யாரும் இல்லை. எனது முந்தைய நிறுவனம், சம்பளத்தை ரொக்கமாகப் பெறுவதில் பிரச்சினை இல்லை எனில், மாதத்திற்கு 30,000 சம்பளம் தர முடியும் என்று கூறியது, நான் முட்டாள்தனமாக​​ அதை ஏற்றுக்கொண்டேன், எனவே என்னுடைய ரிலீவிங் கடிதத்தைத் தவிர, நான் வேலை செய்ததற்கான எந்த ஆதாரமும் அவர்களிடத்தில் இல்லை. அதேபோல பிஎஃப் கணக்கும் என்னிடத்தில் இல்லை.

வேலையை விட்டே அனுப்பினர்

வேலைக்குச் சேரும்போதே இவை அனைத்தையும் டிசிஎஸ் நிறுவனத்தில் கூறி இருந்தேன். அப்போதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றவர்கள், இப்போது அதைக் காரணம் காட்டி வேலையை விட்டு அனுப்பினர்.

அப்போது, ஒரு மணி நேரம் அவகாசம் அளித்து, ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது வேலையை விட்டு நிறுத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னதாக ரெடிட் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவுக்கு, நெட்டிசன்கள் பலரும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் தங்களுக்கும் டிசிஎஸ் நிறுவனத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த போக்கு குறித்த பதிவு, ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget