TN 10th Result 2026 Date: மே 20 வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 5 வழிகளில் பார்க்கலாம்- எப்படி?
10th Result 2026 Tamil Nadu Date: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 வெளியாகும் நிலையில் அதை 5 வழிகளில் காண்பது எப்படி என்று காணலாம்.

தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் 10ஆம் வகுப்பு அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20) வெளியாக உள்ளன.
இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இப்போது உறுதி செய்துள்ளார். இதை 5 எளிய வழிகளில் காண்பது எப்படி என்பது குறித்துக் காணலாம்.
2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற்றன. குறிப்பாக முதல் நாளான மார்ச் 11 தமிழ் பாடத்துக்கான தேர்வும் 16ஆம் தேதி ஆங்கில பாடத்துக்கான தேர்வும் நடைபெற்றது. மார்ச் 25ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் 30ஆம் தேதி அறிவியல் தேர்வும் நடைபெற்றது. ஏப்ரல் 2ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடந்தது.
இணைய தள முகவரி வெளியீடு
மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , ஆகிய இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். அதேபோல டிஜி லாக்கர் செயலி மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
செயலிக்குப் பதிலாக results.digilocker.gov.in என்ற இணைய முகவரியிலும் தேர்வு முடிவுகளைக் காணலாம். மேலும் தேர்வர்கள் மேலே உள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளிகளிலேயே பார்க்க முடியும்
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























