மேலும் அறிய

10th Exam Results: இந்த தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வெளியாகாது: அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தங்களின் முழு எண்ணிக்கையிலான ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளிகளுடைய முடிவுகள் வெளியிடப்படாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தங்களின் முழு எண்ணிக்கையிலான ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளிகளுடைய முடிவுகள் வெளியிடப்படாது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர் செல்வக் குமார் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில், தங்கள் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத் தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடவாரியான எண்ணிக்கை விவரம், அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாகக் கணக்கிட்டு பாட வாரியான / பயிற்று மொழி வாரியான ஆசிரியர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்கவேண்டும். 

அந்தந்த வழியில் போதிக்கும் ஆசிரியர்கள்

தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத் தாட்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்ற வேண்டும். மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் பயிற்றுமொழி வாரியான விடைத்தாட்களின் எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில் ஆங்கிலம், தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

முகாம் பணிக்கான அட்டவணையில் விடைத்தாள் திருத்தும் பணி பணி குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் திட்டமிட்டு தொய்வில்லாமலும், காலதாமதம் இல்லாமலும் நடைபெற வேண்டும். அரசு பள்ளிகள், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் , தனியார்  பள்ளிகள் அனைத்திலிருந்தும் பத்தாம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்ப வேண்டும். 

10th Exam Results: இந்த தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வெளியாகாது: அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை

 முழு எண்ணிக்கையில் அனுப்பினால் மட்டுமே தேர்வு முடிவுகள்

எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அந்தப் பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். எனவே ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைப் பட்டியலை (Teachers Profile) தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும்.

மேலும் ஒரு கல்வி மாவட்டத்தில் இரு முகாம்கள்/ மூன்று முகாம்கள் அமைக்கப் பெற்றிருப்பின் முகாம்களின் தேவைக்கேற்ப விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை (CE, AE, SO & MVO) சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்திட வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 19.04.2023-க்குள் நியமன ஆணை தவறாமல் வழங்க வேண்டும்''.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர் செல்வக் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

10ஆம் வகுப்புத் தேர்வுகள் 20ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget