மேலும் அறிய

காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

 வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்காவில்  இளம் காதல் ஜோடி விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி பூங்கா  கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு தமிழக அரசு நிபந்தனைகள் கூடிய தளர்வுகள் அளிக்கப்படது, அதன் அடிப்படையில்  வந்தவாசியில் உள்ள பூங்கா திறக்கப்ட்டது, இதில்  ஏராளமான பொது மக்கள் காலையிலும், மாலையிலும் உடற் பயிற்சி, மற்றும் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். 

பூங்காவில் காலை 5 மணிமுதல் 8.30 மணிவரையிலும் மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரையில் திறக்கப்பட்டு இருக்கும், பூங்காவிற்கு  வழக்கம் போல் மாலை நேரத்தில் உடற் பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த  பொதுமக்கள் பூங்காவில் ஒரு பகுதியில் மரத்தடியில் ஒரு இளம்பெண்ணும், வாலிபர் ஒருவரும் வாயில் நுரைத்தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர், இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், 

காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்து கிடந்தவர்களின் உடல்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர்களின் அருகில் விஷப்பாட்டில், செல்போன் மற்றும் ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கிடந்துள்ளது . செல்போன்கள் மூலம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் இறந்து கிடந்தவர்கள் காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகள் அக்சயா (19) என்றும் அதே கிராமத்தின் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் பரத் (20 ) என்றும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் பால் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டில் இருந்து ஒன்றாக  சென்று கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்துள்ளது.  அதுவே சில நாட்களில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

காதலியாய் மாறிய தோழி... பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி..

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் குறித்து இருவரின் வீட்டில் தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், காதலர்கள் சந்திக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, வந்தவாசி பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி தனிமையில் சந்தித்துள்ளது. அங்கு மருந்தை குடித்த இருவரும், தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  பல்வேறு கோணங்களில்  விசாரணை செய்து வருகின்றனர். பெற்றோர் எதிர்ப்பால் இளம் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget