என் சாவுக்கு மனைவியும் மாமியாரும்தான் காரணம் - ஆடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை...!
’’இந்துமதி வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று குழந்தையை பார்க்க வேண்டும் என கேட்டு விநாயக மூர்த்தி மீண்டும் தமது மனைவியிடம் மன்றாடியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது’’
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பள்ளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயக மூர்த்தி (34). இவரது மனைவி இந்துமதி (22), இவர் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் அனுஸ்ரீ என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் விநாயக மூர்த்தி மலேசியாவில் வேலை செய்து வந்தார்.
Suba Vee Interview: சித்தப்பாகிட்ட சீமான் ஏன் கணக்கு கேக்கல? சுப வீ
Sasikala: கால்குலேட்டரில் அடங்காத சசிகலாவின் சொத்துகள்
இதனிடையே இந்துமதிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விநாயக மூர்த்தி மலேசியாவிலிருந்து கடந்த பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று இந்துமதி தமது தாய்வீடான சாரத்தில் இருந்தபோது அங்கு சென்ற விநாயக மூர்த்தி, இந்துமதியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றுள்ளார். இது தொடர்பாக ஒலக்கூர் போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இந்துமதி வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று குழந்தையை பார்க்க வேண்டும் என கேட்டு விநாயக மூர்த்தி மீண்டும் தமது மனைவியிடம் மன்றாடியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விநாயக மூர்த்தி நேற்று மதியம் அவரது விவசாய நிலத்திற்கு சென்று செல்போனில் எனது சாவுக்கு என் மனைவி மற்றும் மாமியார்தான் காரணம் என பதிவு செய்துவிட்டு, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அவ்வழியாக சென்றவர்கள் உடலை பார்த்து ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் விநாயகமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கு தனது மனைவியும், மாமியாரும்தான் காரணம் என்று என்று அவர் தனது செல்போனில் ஆடியோவாக பதிவிட்டு இருந்தார். இது குறித்து ஏழுமலை கொடுத்த புகாரில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாவுக்கு மனைவி, மாமியார்தான் காரணம் என்று செல்போனில் ஆடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.