Crime: நடுரோட்டில் நிர்வாணமாக ஓடிய பெண்.. 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் ஷாக்!
ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் 25 வயதான இளம்பெண் ஒருவர் நேற்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருந்த 3 பேர் கொண்ட கும்பல் முதலில் அந்த பெண்ணிடம் பேச்சு வார்த்தை கொடுத்தது. பின்னர், அந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திவிட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்றது. இதனை அடுத்து, அந்த பெண்ணின் ஆடைகளை பறித்து வைத்து கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பின்னர், மூன்று பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இவர்கள் 3 பேரும் அப்போது குடிபோதையில் இருந்துள்ளனர்.
பின்னர், அந்த பெண், மூன்று பேரிடம் இருந்து தப்பிக்க முயன்றது. இதனை அடுத்து, அந்த பெண் ஆடையின்றி தப்பித்து நடுரோட்டில் அங்குமிங்கும் ஓடியதாக சொல்லப்படுகிறது. அந்த பெண் அழுதுக்கொண்டே 10 நிமிடம் ரோட்டில் ஓடியதாக தெரிகிறது. பின்னர், அருகில் இருந்தவர்களிடம் உதவி கோரினார். சிலர் இந்த பெண்ணை மனநல பாதிக்கப்பட்டவர் என்று நினைத்து உதவி செய்யாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து, கிராமத்தினர் அந்த பெண்ணுக்கு ஆடை கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிர்வாணமாக ஓடிய பெண்:
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சோட்டு (42), கிர்தாரி (30) ஆகியோரை கைது செய்தனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைதான நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை மறுத்தனர். அதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவர்களுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், அந்த பெண் அவருடைய விருப்பத்தின்படியே தான் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாடகம்:
பின்னர், அந்த பெண், தனது ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை எனக் கூறி நாடகமாடியதாக அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான், ராஜஸ்தானில் வேறொரு நபருடன் தொடர்பு எனக் கூறி கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர், மனைவியின் ஆடைகளை களைந்து, நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
G20 Summit: முடிந்தது ஜி20 மாநாடு..! ஆனால், மீண்டும் நவம்பரில் ஜி20 கூட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு