Crime: 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. பரிதாபமாக பறிபோன உயிர்.. டெல்லியில் ஷாக்..!
டெல்லியில் 19 வயது இளம்பெண்ணை 3 பேர் கொண்ட பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: டெல்லியில் 19 வயது இளம்பெண்ணை 3 பேர் கொண்ட பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுப்பாலியல் வன்கொடுமை:
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. சமீபத்தில் கூட, ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தலைநகர் டெல்லியில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி அருகே காசியாபாத் பகுதியில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் 19 வயது இளம்பெண். ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த அவர், பணி நிமித்தமாக டெல்லி காசியாபாத்தில் உறவினருடன் வசித்து வந்துள்ளார். காசியாபாத்தில் உள்ள வீட்டில் வசதி குடியிருப்பில் பகுதி நேரமாக வேலை செய்யும் இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று தனது கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
உயிரிழப்பு:
3 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ நடந்த இடத்தில் இளம்பெண் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜய் (32) என்பவரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வீட்டு வசதி குடியருப்பில் மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், இந்த கொடூர சம்பவத்தால் மன விரக்தி அடைந்த அப்பெண் விஷம் அருந்தியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Varalakshmi: என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியதா...? - பரபரப்பு விளக்கம் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்
Kashmir Statehood: மீண்டும் மாநிலமாகிறதா ஜம்மு காஷ்மீர்? உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபர பதில்