22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
Crime Affair Murder: தகாத உறவு காரணமாக கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Crime Affair Murder: கணவன் மாரடைப்பு காரணமாக இறந்து கிடந்ததாக மனைவி அளித்த புகாரின் விசாரணை முடிவில் கொலை சதி அம்பலமாகியுள்ளது.
கணவனை கொன்று நாடகமாடிய மனைவி:
ஐதராபாத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்துவிட்டு அவர் கழிவறையில் இறந்து கிடந்ததாக நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் தனியார் பல்கலைக்கழகத்தில் லாஜிஸ்டிக் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். கிழக்கு போடுப்பால் பிருந்தாவன் காலணியை சேர்ந்த 45 வயதான அசோக், மனைவி பூர்ணிமா மற்றும் கூட்டாளிகளால் சேர்ந்து கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் தகாத உறவு கொண்டிருந்த 22 வயதான கட்டுமான தொழிலாளி ஒருவருடன், மற்றொரு நபரும் உதவியதாக காவல்துறையின் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாரடைப்பால் இறந்ததாக புகார்:
தனது கணவன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக குடும்பத்தினரிடம் கூறி திசைதிருப்ப முயன்றுள்ளார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மெடிபள்ளி காவல்நிலையத்தில் பூர்ணிமா புகார் ஒன்றும் அளித்துள்ளார். அதில், தனது கணவர் கழிவறையில் சுயநினைவின்றி விழுந்து கிடந்ததாகவும், மல்கஜ்கிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதையும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையும் மேற்கொண்டனர்.
சந்தேகமும்.. அம்பலமான உண்மையும்..
போலீசார் ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் இறந்தவரின் கழுத்து மற்றும் கன்னம் போன்ற உடலின் பல பகுதிகளில் காயம் இருந்தது கண்டறியப்பட்டது. இது காவல்துறைக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவரின் வீட்டைச் சுற்றி இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்த போலீசார், கொல்லப்பட்டவரின் மனைவி உட்பட 3 பேரை கைது செய்தனர்.
தகாத உறவால் கணவன் கொலை
காவல்துறை விசாரணையின் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பூர்ணிமா தகாத உறவில் இருப்பது குறித்து சந்தேகித்த கணவன் அசோக், பல்வேறு கேள்விகளை எழுப்பி கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். இதனால் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய மனைவி முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த 11ம் தேதி அசோக் வீடு திரும்பியதும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகள் வீட்டிற்குள் நுழைந்து அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பிரதான குற்றவாளியான மனைவி பூர்ணிமா கணவனின் கால்களை இறுக்கிப் பிடித்து, தாக்குவதற்கு வழிவகை செய்துள்ளார்.
அதன்பிறகு வீட்டில் இருந்த துணியை கொண்டு பெண்ணின் கள்ளக் காதலன், அசோக்கை கழுத்தை நெறுக்கி கொலை செய்துள்ளான். பின்பு திட்டப்படி, கணவனின் உடலில் இருந்த உடைகளை மாற்றிய மனைவி, அவர் குளித்துக் கொண்டு இருந்தபோது இறந்தது போன்ற சூழலை உருவாக்கியுள்ளார் என காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















