மேலும் அறிய

Crime: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! கணவர் முன்பே கொடூரம் - ஜார்கண்டில் ஷாக்!

ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண்ணை, கணவர் முன்பே 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண்ணை, கணவர் முன்பே 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா வந்த ஸ்பெயின் தம்பதி:

ஆசிய நாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி ஒரு பைக் ரைடைத் திட்டமிட்டிருந்தனர்.  ஆசிய நாடுகளில் பைக்கில் சென்று தங்களுக்கு பிடித்தமான இடங்களில் சுற்றி பார்க்க வேண்டும் என்ற திட்டத்துடன்  இந்த தம்பதி முதலில் பாகிஸ்தான் சென்றனர்.

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கு சென்ற இந்த தம்பதி அங்கிருந்து வங்கதேசம் சென்றனர். வங்க தேசத்தில் முக்கியமான இடங்களை சுற்றி பார்த்த தம்பதி, அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பீகார் வழியாக ஜார்கண்ட் வந்துள்ளனர்.  இந்தியாவைக் கடந்து பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்பது தான் இவர்களிடம் திட்டமாக இருப்பதாக தெரிகிறது. 

பைக்கிலேயே பல்வேறு இடங்களுக்கு செல்லும் இந்த தம்பதி  இரவு நேரத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர்.  அந்த வகையில், கடந்த 1ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் தும்கா மாவட்டத்தில் இந்த தம்பதி இரவில் சென்றடைந்துள்ளனர்.

பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை:

அங்கு, தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு 11 மணியளவில் சுமார் 7 முதல் 10 பேர் கொண்டு கும்பல், தற்காலிக கூடாரம் இருக்கும்  இடத்தில் புகுந்து, சுற்றுலா தம்பதியை கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர், அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இந்த நேரத்தில், அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வெளிநாட்டு பயணிகள் இருவரும் சாலையோரத்தில் இருந்ததை  பார்த்தனர்.  ரத்த காயங்களுடம் இருந்த இருவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

அப்போது தான், அந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் முழு வீச்சில் தேடி வருகின்றனர். 

3 பேர் கைது:

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நேற்று இந்த விவாகாரத்தை பாஜக எழுப்பியது. ஜார்க்கண்ட் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி சட்டப்பேரவையில் பேசுகையில், ”வெளிநாட்டவர்களுடன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, ​​ஜார்கண்ட் மாநிலத்துக்கு யார் வர விரும்புவார்கள்? இங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. 

போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர், "இது துரதிர்ஷ்டவசமானது. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமாட்டார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget