மேலும் அறிய

Crime : விழுப்புரத்தில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்.. அதிரவைக்கும் பின்னணி

கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு சொந்த ஊர் சென்று திருடிய நகை, பொருட்களை விற்பனை செய்வதும் இங்கு லாட்ஜ் உள்ள இடங்களில் வாடகைக்கு எடுத்து நோட்டமிட்டு இந்த சம்பவங்களை அரங்கேற்றியது வெளிவந்துள்ளது

விழுப்புரத்தில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தவர் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் பகுதிகளில் கடந்த சில மாதமாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வங்கிகளில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை பறித்துச்செல்வது, வீட்டை உடைத்து கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நடந்து வந்தன.

இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி தீபக்சிவாச் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு வழிபறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

ஆதாரங்களை சேகரித்த தனிப்படை

தொடர்ந்து சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை சேகரித்த தனிப்படை போலீசார் கடைசியில் இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது வடமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா தாலுகா ராய்ப்பூர் பகுதியை சேர்ந்த நசீர் மகன் சதாப் (35), முரதாபாத் மாவட்டம் கஜிபுரா பகுதியை சேர்ந்த அனிஸ் மகன் இர்பான் (42), புதுடெல்லி ராஜீவ் நகரை சேர்ந்த அமீர் ஹுசைன் மகன் அலாவுதீன் என்கிற அலி (27) என்பது தெரிந்தது.

கவனத்தை திசைதிருப்பி 13 பவுன் நகை அபேஸ்

இவர்கள் 3 பேரும் கடந்த 3.8.2023 அன்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த விக்கிரவாண்டி ஆசூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகன பெட்டியை திறந்து அதிலிருந்த ரூ.2. 15 லட்சத்தை கொள்ளையடித்ததும், கடந்த 6.4.2024 அன்று மாலை விழுப்புரம் பாப்பான்குளம் சிவன் கோவில் அருகே நடந்துசென்ற விழுப்புரம் - சென்னை மெயின் ரோடு ஆர்.பி. நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கீதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஒரு நகை கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து அங்கிருந்த ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பி 13 பவுன் நகையை அபேஸ் செய்திருப்பதும் தெரியவந்தது.

சொந்த ஊர் சென்று திருடிய நகை, பொருட்கள் விற்பனை

தொடர்ந்து போலீசார் உத்தரபிரதேசத்திற்கு விரைந்து அவர்களை கடந்த மாதம் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் தீரன் பட சினிமா பானியில் வழிபறி, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு சொந்த ஊர் சென்று திருடிய நகை, பொருட்களை விற்பனை செய்வதும் இங்கு லாட்ஜ் உள்ள இடங்களில் வாடகைக்கு எடுத்து நோட்டமிட்டு இந்த சம்பவங்களை அரங்கேற்றியது தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடமிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தின் மேலும் பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய இவர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

டெல்லி சந்தோஷ் குமார்(27). உத்தரபிரதேசம் சபாபுல்(25) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அவர்களது மாநிலத்திற்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்து அழைத்துவந்தனர். விசாரணையில், நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு பையூரில் வசிக்கும் ராஜா மகன் சீனிவாசன் என்பவர் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு காமராஜர் வீதியில் உள்ள நகைக்கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் வைத்துவிட்டு சென்றதை இவர்கள் தான் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யபட்டன. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah Naxal: ”நக்சல்கள் நாட்டில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்” நாடாளுமன்றத்தில் அமித் ஷா பிரகடனம்
Amit Shah Naxal: ”நக்சல்கள் நாட்டில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்” நாடாளுமன்றத்தில் அமித் ஷா பிரகடனம்
MK Stalin: திமுகவினர் ஒத்துழைக்க மறுப்பா? - உடனே தகவல் சொல்லுங்க.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
MK Stalin: திமுகவினர் ஒத்துழைக்க மறுப்பா? - உடனே தகவல் சொல்லுங்க.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
Trump Iran War: பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான் - ”மாற்றி மாற்றி நியாயமே இல்லாமல் பேசும் ட்ரம்ப்” ஹார்மஸ்
Trump Iran War: பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான் - ”மாற்றி மாற்றி நியாயமே இல்லாமல் பேசும் ட்ரம்ப்” ஹார்மஸ்
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah Naxal: ”நக்சல்கள் நாட்டில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்” நாடாளுமன்றத்தில் அமித் ஷா பிரகடனம்
Amit Shah Naxal: ”நக்சல்கள் நாட்டில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்” நாடாளுமன்றத்தில் அமித் ஷா பிரகடனம்
MK Stalin: திமுகவினர் ஒத்துழைக்க மறுப்பா? - உடனே தகவல் சொல்லுங்க.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
MK Stalin: திமுகவினர் ஒத்துழைக்க மறுப்பா? - உடனே தகவல் சொல்லுங்க.. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
Trump Iran War: பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான் - ”மாற்றி மாற்றி நியாயமே இல்லாமல் பேசும் ட்ரம்ப்” ஹார்மஸ்
Trump Iran War: பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான் - ”மாற்றி மாற்றி நியாயமே இல்லாமல் பேசும் ட்ரம்ப்” ஹார்மஸ்
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
TVK Vijay Affidavit: 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
GOLD SILVER RATE: அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
அதிர்ச்சி கொடுத்த தங்கம்; காலையில் குறைந்து மாலையில் இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
“செந்தில் பாலாஜிக்கு சவால்
“செந்தில் பாலாஜிக்கு சவால்" - நாணயங்களுடன் வந்த நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்...
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TVK Vijay Campaign: ’’ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க; சென்னையின் அடையாளம், வீட்டு வாசல்ல தொடங்கறேன்’’ உருகிய விஜய்!
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
TN Election: தகிக்கும் தேர்தல் களம்; முதல் நாள்லயே ஒன்றாய் சம்பவம் செய்த முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய்
Embed widget