மேலும் அறிய

எங்க ஊருக்கே வந்து கெத்து காட்டுறியா? - டிப்பர் லாரி ஓட்டுநர் கொலையில் 5 பேர் கைது, அதிர்ச்சி வாக்குமூலம்

எங்கள் ஊருக்கே வந்து கெத்து காட்டுகிறாயா என டிப்பர் லாரி டிரைவரை வெட்டி கொலை செய்த 5 பேர் கைது.

விழுப்புரம்: வானுார் அருகே டிப்பர் லாரி டிரைவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிராக்டர் மீது மோதிய முன்விரோதத்தால் டிப்பர் லாரி டிரைவரை வெட்டி கொலை செய்தோம்!

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் டிராக்டர் மீது மோதிய முன்விரோதத்தில் டிப்பர் லாரி டிரைவரை வெட்டி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 5 பேர் போலீசில் வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி தாலுகா மதுரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (50). இவர் திருவக்கரையில் இயங்கி வரும் கிரஷர் ஒன்றில் டிப்பர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி திருவக்கரைக்கு வீட்டில் இருந்து வேலைக்கு வந்தார். அன்றிரவு வீட்டுக்கு செல்லாமல், திருவக்கரையில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு, மீண்டும் தனது மகன் கண்ணனின் பைக்கில் கிரஷருக்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல், இருவர் குடியிருப்பு பகுதி அருகில்சென்றபோது கதிர்வேலை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.

கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட இளைஞர்கள்

இதுகுறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றினர். அதில், கதிர்வேல் பைக்கில் செல்லும்போது, அவரை ஒரு கும்பல் பின் தொடர்ந்து சென்றது தெரியவந்தது. அந்த காட்சிகளை வைத்து திருவக்கரை சுப்புராயன் (21), அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (20), கார்த்திகேயன், சக்திவேல் (21) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கதிர்வேலை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 5 பேரும் அளித்த வாக்குமூலம்.,

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கதிர்வேல் ஓட்டிச்சென்ற டிப்பர் லாரி, சுப்புராயன் ஓட்டிச்சென்ற டிராக்டர் மீது மோதியுள்ளது. அதில் டிராக்டர் சேதமடைந்ததால், கதிர்வேலிடம், சுப்புராயன் நியாயம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விபத்து பிரச்னை அவர்களுக்குள் முன்விரோதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, சுப்புராயன், கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர், கதிர்வேல் ஊருக்கு அருகில் உள்ள திருக்கனூர் பாரில் மது அருந்தியுள்ளனர். அந்த இடத்தில் கதிர்வேலும் மது அருந்தியுள்ளார்.

எங்கள் ஊருக்கே வந்து கெத்து காட்டுகிறாயா?

அப்போது, அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து கதிர்வேல் மீது சுப்புராயன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் முன்விரோதம் அதிகரித்துள்ளது. கடந்த 6ம் தேதி நள்ளிரவு திருவக்கரை கிராமத்தில் நடந்த கூத்து பார்ப்பதற்கு கதிர்வேல் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அங்கு சுப்புராயன் தலைமையிலான கும்பல் மதுபோதையில் இருந்துள்ளனர். எங்கள் ஊருக்கே விலை உயர்ந்த பைக்கில் வந்து கெத்து காட்டுகிறாயா என ஆத்திரமடைந்தனர். அந்த ஆத்திரத்தில், கதிர்வேலை பின்தொடர்ந்து சென்று 5 பேரும் அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 4 பேர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் கடலூர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டான்.

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Embed widget