Crime: ஆரோவிலில் கொடூரம்....பிரபல ரவுடியின் தம்பி வெட்டி படுகொலை...மீண்டும் தலைதூக்கும் 'கேங் வார்'
விழுப்புரம் : ஆரோவில் அருகே பிரபல ரவுடியின் தம்பி வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை..
விழுப்புரம் : ஆரோவில் அருகே முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடியின் தம்பி வெட்டி படுகொலை செய்து மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த அணிச்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல்ராஜ் வயது 27. இவர் ஆரோவில் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் வினோத் ராஜ் இவரை புதுச்சேரியை சேர்ந்த ரவுடிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்தனர். இந்நிலையில் விமல் ராஜ் இன்று வழக்கம் போல ஆரோவில் அருகே உள்ள அவர் வேலை செய்யும் ஹோட்டலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென அவரை வழிமறித்த மர்ம கும்பல் அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த விமல் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஒருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கள்ளசாராயம் விவகாரம் முடிந்த நிலையில் தற்போது கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் காவலர்கள் சரிவர ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக காவலர்கள் ஒரே சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியமர்த்தபடுவதால் அவர்கள் மெத்தனமாக செயல் படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்