குறைந்த முதலீட்டில் அதிக லாபம்... டாஸ்க்கை முடிக்க சொல்லி ரூ.1 லட்சம் மோசடி - பெண்ணை ஏமாற்றிய மோசடி நபர்
விழுப்புரம் அருகே குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என டாஸ்க்கை முடிக்க சொல்லி ரூ.1 லட்சம் மோசடி
![குறைந்த முதலீட்டில் அதிக லாபம்... டாஸ்க்கை முடிக்க சொல்லி ரூ.1 லட்சம் மோசடி - பெண்ணை ஏமாற்றிய மோசடி நபர் Villupuram Rs 1 Lakh Fraud asking to complete the task for low investment and high profit TNN குறைந்த முதலீட்டில் அதிக லாபம்... டாஸ்க்கை முடிக்க சொல்லி ரூ.1 லட்சம் மோசடி - பெண்ணை ஏமாற்றிய மோசடி நபர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/05/76269210a3d5a34415ff5650ececf9c9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 4ம் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த நபர் ஆன்லைன் பகுதிநேர வேலை எனக்கூறி கூகுள் மேப்பிலிருந்து ஒரு லிங்கை அனுப்பி வைத்து அதில் வரும் ஓட்டல், ரெஸ்டாரண்ட்டின் புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண், அந்த நபர் கூறியவாறு செய்து ரூபாய் 210 பெற்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் அந்த நபர், டெலிகிராம் ஐடியில் இருந்து பெண்ணை தொடர்புகொண்டு, சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறியுள்ளார். அதன்படி அந்த பெண், ரூபாய் 1000 முதலீடு செய்து ரூபாய் 1410ஆக திரும்ப பெற்றார்.
பின்னர் அப்பெண்ணை, மற்றொரு டெலிகிராம் குழுவில் இணைந்து ஒரு லிங்கை அனுப்பி வைத்தனர். அந்த லிங்கிற்குள் சென்று தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து டாஸ்க் செய்வதற்காக, தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஜிபே மூலம் ரூபாய் 99 ஆயிரத்தை 5 தவணைகளாக அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பின்பும், அப்பெண்ணுக்கு சேர வேண்டிய தொகையை தராமல் மேலும் பணம் கேட்டு ஏமாற்றி மோசடி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)