Villupuram: ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து - ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்: பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகளுக்கு மத்தியில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்ட மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுப்புரம் தாலுகா போலீசார் அரிசி மினிவேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த மினி வேனில் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் மைய தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது இது குறித்து தகவல் அறிந்த சென்ற விழுப்புரம் தாலுகா போலீசார் சென்றனர். அப்போது லாரி ஓட்டுனர் வண்டியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது தெரியவரவே மினி வேனில் போலீசார் சேதனை செய்தபோது பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் 35 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசி மற்றும் மினிவேனை பறிமுதல் செய்து வண்டி வாகன எண்னை கொண்டு தப்பியோடிய ஓட்டுனர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, ஓட்டுனர் யார் என்பது குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்