விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் கொள்ளை
விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் ரூ.75 ஆயிரம் பணம் கொள்ளை
விழுப்புரம் : விழுப்புரம் அருகேயுள்ள திருப்பாச்சனூரில் வீட்டின் உரிமையாளர்கள் உறங்கி கொண்டிருக்கும் போதே பின் பக்க கதவை உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் 75 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள திருப்பாச்சனூர் கிராமத்திலுள்ள ஆஞ்சநேயர் கோவில் வீதியில் முத்துக்கிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 75 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 20 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து வீட்டில் உறங்கி கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணனின் மனைவி கீதாவின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர்.
அப்பொழுது கீதா அலறியடித்து கத்தியதில் அவரது மகன் பிரகாஷ் எழுந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து வேகமாக ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தாலுகா காவல் நிலையத்திற்கு பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோதே மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.