மனநலம் பாதிக்கப்பட்டவர் அரசு பேருந்தில் பாய்ந்து தற்கொலை - பதைபதைக்கும் வீடியோ
செஞ்சி காவல் நிலையம் முன்பு மனநலம் பாதிக்கப்பட்டவர் அரசு பேருந்தில் பாய்ந்து தற்கொலை
விழுப்புரம்செஞ்சி காவல் நிலையம் முன்பு மனநலம் பாதிக்கப்பட்டவர் அரசு பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலையம் முன்பு இன்று காலை 8:30 மணி அளவில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய செஞ்சி போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் : செஞ்சி காவல் நிலையம் முன்பு மனநலம் பாதிக்கப்பட்டவர் அரசு பேருந்தில் பாய்ந்து தற்கொலை#villupuram pic.twitter.com/BLRdDQy4Fd
— SivaRanjith (@Sivaranjithsiva) September 13, 2022
இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் திருவண்ணாமலை மாவட்டம் தாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(30) என்பதும், இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் செஞ்சி போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இளைஞர் அரசு பேருந்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு
shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்