Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்... ஆபாச வீடியோவை இன்ஸ்டாவில் பதிவேற்றிய இளைஞர் கைது
விழுப்புரம் : திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணின் ஆபாச வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்.
![Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்... ஆபாச வீடியோவை இன்ஸ்டாவில் பதிவேற்றிய இளைஞர் கைது villupuram Forced woman to marry uploads pornographic video on Instagram TNN Crime: திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்... ஆபாச வீடியோவை இன்ஸ்டாவில் பதிவேற்றிய இளைஞர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/11/b55a935b0ee77293d4b98bd86e601b561689056866211113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள கொல்லமேடு கீழண்டைத் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் விஜய் (வயது 28). இவரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய ஒரு பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக விஜய், ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண், விஜயுடன் நெருங்கி பழகினார். மேலும் அந்த பெண், ஆபாசமாக இன்ஸ்டாகிராமில் தோன்றியுள்ளார்.
இதை விஜய் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தார். இந்த சூழலில் அந்த பெண், விஜயிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்போவதாக அந்த பெண் தொரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாயிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சைபர்கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து காஞ்சிபுரத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற விஜயை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இணையத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும், தவறான வழியில் செல்வதால் இதுபோன்ற பிரச்சனைகள் வரும் எனவே பெண்கள், இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுதுகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)