மேலும் அறிய

விழுப்புரத்தில் கொடூரம்... மாடு கட்டுவதில் தகராறு; அடித்தே கொல்லப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவன்...

திருவெண்ணெய்நல்லூர் அருகே, மாடு கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் 12-ஆம் வகுப்பு மாணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, மாடு கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் 12-ஆம் வகுப்பு மாணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாடு கட்டுவதில் தகராறு - பிளஸ் 2 மாணவன் அடித்துக் கொலை!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, மாடு கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் 12-ஆம் வகுப்பு மாணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மழையம்பட்டு ஊராட்சி, தக்கா கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன்.

இவரது மகன் விக்னேஷ் (17). விக்னேஷ் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். வீரப்பனுக்கும், அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பான முன்விரோதம் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கம் போல பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன் விக்னேஷ், தனது வளர்ப்புப் பசு மாட்டினை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள நிலத்தில் கட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணியன், "எனது நிலத்திற்கு அருகில் எப்படி மாட்டை கட்டலாம்?" எனக் கேட்டு ஆபாச வார்த்தைகளால் விக்னேஷைத் திட்டியுள்ளார்.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், அவரது மனைவி பூபதி மற்றும் மகன் அஜய் ஆகிய மூவரும் சேர்ந்து கட்டைகளால் விக்னேஷ் மற்றும் அவரது பெற்றோர் வீரப்பன், மலர் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கினர்.

கட்டையால் பலமாகத் தாக்கப்பட்டதில் மாணவன் விக்னேஷ் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு விக்னேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். படுகாயமடைந்த அவரது பெற்றோருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார், தலைமறைவாக இருந்த சுப்பிரமணியனை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய அவரது மனைவி பூபதி மற்றும் மகன் அஜய் ஆகிய இருவரையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

கல்வி கற்று முன்னேற வேண்டிய பள்ளி மாணவன், குடும்பத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தக்கா கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget