Crime: விழுப்புரம் பரபரப்பு ... இலைகள் விழுந்ததை தட்டிக்கேட்ட பங்காளி கொலை
விழுப்புரம் அருகே இலைகள் விழுந்ததை தட்டிக்கேட்ட பங்காளியை பாங்காளியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம்: சிறுவந்தாடு அருகேயுள்ள ப.வில்லியனூரில் மரத்தின் இலைகள் வீட்டுப் பகுதியில் விழுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பங்காளியை பாங்காளியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள பா.வில்லியனூர் கிராமத்தில் பங்காளிகளான ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கொத்தனாராக பணி செய்து வரும் அரிகிருஷ்ணனுக்கும் ஆனந்த் ராஜ் ஆகிய இருவரின் வீட்டின் அருகில் உள்ள பூவரச மரத்தை வெடடுவதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. ஆனந்தராஜ்க்கு சொந்தமான பூவரசு மரத்தின் இலைகள் அரிகிருஷ்ணன் வீட்டின் பகுதியில் விழுவதாலும் கம்பளி புழு வீட்டிற்குள் வருவதால் வெட்டக்கோரி அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை நீடித்து வந்த நிலையில் நேற்றைய இரவு கொத்தனார் பணிக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 9 மணிக்கு அரிகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தபோது பூவரசு மரத்தை வெட்ட கோரி ஆனந்த்ராஜ் உடன் சண்டையிடுள்ளனர். இந்த சண்டையில் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் அவரது மகன் ஈஸ்வரன், திருமலை, குணால் ஆகியோர் அரிகிருஷ்ணனை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பின்னர் ஆத்திரமடைந்த ஆனந்த் ராஜ் மற்றும் அவரது மகன் ஈஸ்வரன் வீட்டிலிருந்த கத்தியால் அரிகிருஷ்ணனின் தொடை பகுதியில் குத்தியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அரிகிருஷ்ணனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வரும் வழியிலையையே ரத்தம் அதிகமாக வெளியேறி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க்கப்பட்டத்தின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை செய்து குற்றவாளிகள் ஆனந்தராஜ் அவரது மகன் ஈஸ்வரன், திருமலை, குணால் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மரத்தினை வெட்டும் பிரச்சனையில் பங்காளியே பங்காளியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்