Villupuram : மரக்காணத்தில் பேன்சி ஸ்டோரில் உரிமையாளர் மீது தாக்கு... சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
விழுப்புரம் : மரக்காணத்தில் பேன்சி ஸ்டோரில் பொருட்கள் வாங்க வந்த இருவர் கடை உரிமையாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்: மரக்காணத்தில் பேன்சி ஸ்டோரில் பொருட்கள் வாங்க வந்த இருவர் தகராறு கடை உரிமையாளர் மீதும் கடைமீதும் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சன்னதி தெரு பகுதியில் அமைந்துள்ள காவேரி பேன்சி ஸ்டோரில் பொருட்கள் வாங்குவதற்காக மரக்காணம் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் வந்துள்ளனர். பொருட்கள் வாங்கும் போது கடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்பு கடைக்கு வெளியில் விற்பனைக்காக வைத்திருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து வந்து தாக்கியுள்ளனர். மேலும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது, இதில் கடை உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடை உரிமையாளரையும் கடையையும் சேதப்படுத்திய இருவர் தப்பி ஓடினர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து மரக்காணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்