மரக்காணத்தில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு, 3 பேர் கைது! 2 சவரன் செயின் மீட்பு
விழுப்புரம் : மரக்காணம் அருகே ஆலத்துாரில் மூதாட்டியிடம் செயின் பறித்த மூன்று பேர் கைது.

விழுப்புரம்: மரக்காணம் அருகே ஆலத்துாரில் மூதாட்டியிடம் செயின் பறித்த மூன்று பேரை கைது செய்த போலீசார் 2 சவரன் செயின் மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.
மூதாட்டியிடம் செயின் பறித்த மூன்று பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்துார் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் மனைவி கஸ்தூரி (வயது 70) இவர் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு ஆலத்துார் சாய்பாபா கோவில் அருகே சாலையோரம் நின்றிருந்தார். அப்பொதுழுது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர்கள் கஸ்துாரி கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.
இந்த சமபவம் குறித்து கஸ்தூரி மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டை சேர்ந்த உதய சங்கர் மகன் தமிழ்இனியன் (18), மாரி மகன் தமிழ்செல்வன், 21; காஞ்சிபுரம் மாவட்டம், திருவள்ளூவர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் டில்லி, 30; ஆகிய மூவரும் செயின் பறிப்பில் ஈடுப்பட்டு தெரியவந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்து, 2 சவரன் செயின் மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தன. ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது
ஈரோடு மாவட்டம், அரச்சலுார் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா, 19. கல்லுாரி மாணவி. பவானி குமாரபாளையத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெகதீசன், 27, என்பவரிடம் போனில் பேசி கடந்த ஒரு மாதமாக பழகி வந்துள்ளார். ஜெகதீசை தொடர்பு கொண்ட கிருத்திகா, 'உங்களை சந்திக்க வேண்டும்' என கூறி பெருமாநல்லுார் அருகேயுள்ள தட்டாங்குட்டை சொட்டமேடு பகுதிக்கு வரச்சொல்லி உள்ளார்.
ஜெகதீசன், சொட்டமேடு வந்ததும், கிருத்திகா ஒரு வீட்டுக்கு அழைத்துசென்றுள்ளார். திடீரென வீட்டுக்குள் புகுந்த பெண்ணின் நண்பர்கள் பழனிச்சாமி, அருண் ஆகியோர் போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர். போட்டோ, வீடியோவை ஜெகதீசனிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஜெகதீசன், இரண்டு பவுன் தங்க செயின், 1.5 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொடுத்துள்ளார். பணம், நகை ஆகியவற்றை பறித்து கொண்டு மூன்று பேரும் அங்கிருந்து தலைமறைவாயினர். ஜெகதீசன் பெருமாநல்லுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, கிருத்திகா, 19, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் உட்டமலை நாடார் காட்டை சேர்ந்த அருண், 33, ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஜி.எஸ்., காலனி பழனிச்சாமி, 51, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.





















