(Source: ECI/ABP News/ABP Majha)
போலீஸ் முன் மோதிக்கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் - விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரத்தில் காவல்துறை முன் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: போதையில் இருந்த கல்லூரி மாணவரிடம் பள்ளி மாணவர் பேருந்தில் செல்ல நேரம் கேட்டபோது ஏற்பட்ட பிரச்சனையில் பள்ளி மாணவரின் மண்டையை கல்லூரி மாணவர் உடைத்துள்ளார். இதனால் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவரும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு பேருந்து மூலம் வருகைபுரிந்து கல்வி பயில செல்கின்றனர். இந்நிலையில், பள்ளி கல்லூரியை முடித்துவிட்டு பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பள்ளி கல்லூரியை முடித்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி கல்லூரி வகுப்பு நேரங்களை முடித்துவிட்டு பள்ளி மாணவர் அபிஷ் பிரதிப் ஆகியோர் பழையபேருந்து நிலையத்தில் இருந்து நன்னாடு கிராமத்திற்கு செல்ல பழையபேருந்து நிலையம் வந்துள்ளனர். பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவர் சதீஷிடம் சென்று இரு பள்ளி மாணவர்களும் நேரம் கேட்டுள்ளனர். அதற்கு போதையில் இருந்த கல்லூரி மாணவர் யாரிடம் வந்து நேரம் கேட்கிறாய் என்று வாக்கு வாதம் செய்து சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திர மடைந்த பள்ளி மாணவர் அபிஷ்யை கல்லூரி மாணவர் சதீஷ் தாக்கியதில் பள்ளி மாணவரின் மண்டை உடைந்துள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவர்தனது சக நண்பர்களை அழைத்து கல்லூரி மாணவரை பழைய பேருந்து நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடத்தில் கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் தாக்கி கொள்ளவதை அப்பகுதியில் இருந்த வர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவானது வேகமாக பரவி வருகிற நிலையில் இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.