Crime: பாட்டி வீடு மீது ஆசை...வாய்பேச முடியாத தாத்தா, பாட்டியையும் கொன்ற பேரன் கைது
விழுப்புரம் : பாட்டி வீட்டிற்கு ஆசைப்பட்டு குளிர்பானத்தில் விஷம் கலந்து பாட்டி, தாத்தாவை கொன்ற பேரன் கைது
![Crime: பாட்டி வீடு மீது ஆசை...வாய்பேச முடியாத தாத்தா, பாட்டியையும் கொன்ற பேரன் கைது Villupuram Arrested grandson who poisoned soft drink and killed grandmother and grandfather for wanting to go home TNN Crime: பாட்டி வீடு மீது ஆசை...வாய்பேச முடியாத தாத்தா, பாட்டியையும் கொன்ற பேரன் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/136e488cf9d128f155d72d51770fc2ff1681819238048194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில் தாத்தா பாட்டியின் வீட்டிற்கு ஆசைப்பட்டு மது போதையில் பேரனே வாய்பேச முடியாத தாத்தாவைவும் பாட்டியையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில் வயதான தம்பதிகளான கலுவு ஆறுமுகம் அவரது மனைவி மணி கலுவு ஆகிய இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் 16 ஆம் தேதி மாலையில் மது போதையில் இருந்த வயதான தம்பதியின் பேரனான அருள் சக்தி என்ற இளைஞர் வயதான தம்பதி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த வயதான தம்பதியினரிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும்படி சண்டையிட்டுள்ளார். அப்போது வயதான தம்பதியினர் வீட்டை எழுதி தரமுடியாது என கூறவே ஏற்கனவே குளிர் பானத்தில் விஷம் கலந்து எடுத்து சென்ற குளிர்பானத்தை வயதான தம்பதிகளை குடிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளார். வயதான தம்பதிகள் குளிர்பானத்தை அருந்திய உடன் பேரன் அருள் சக்தி இருவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
அதன் பின்பு காடாம்புலியூரில் வசிக்கும் தனது தந்தைக்கு போன் செய்து உனது தாயையும், தகப்பனையும் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டதாகவும் தாத்தாவின் வீட்டை எனக்கு எழுதி தரவில்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் எச்சரித்து போனை சுவிட் ஆப் செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளைஞரின் தந்தை முருகன் தனது வசிக்கும் வீட்டிற்கு அருகில் வசிக்கும் கற்பகம் எனபவருக்கு போன் செய்து தந்தையும் தாயும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வயதான தம்பதிகள் வீட்டிற்கு சென்று கற்பகம் பார்த்தபோது இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருவரும் இறந்து கிடப்பதாக கூறிவிட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்தனர். தாலுகா போலீசார் அருள் சக்தியை கைது செய்து விசாரனை செய்ததில் சொத்துக்காக தனது தாத்தா பாட்டியை மதுபோதையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொண்டுத்து கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தாத்தா பாட்டியின் வீட்டிற்கு ஆசைப்பட்டு மது போதையில் பேரனே வாய்பேச முடியாத தாத்தாவைவும் பாட்டியையும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)