மேலும் அறிய
Advertisement
கேடி வேலை பார்த்து கோடிகளை அள்ளிய அதிகாரிகள்; ஒன்றல்ல இரண்டல்ல... 200 கோடிப்பே...!
ஸ்ரீபெரும்புதூரில் சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்தியதில் 200 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 82 ஏக்கர் நிலத்திற்கான பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச் சாலை ,ஆறு வழிச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது . இந்தச் சாலை விரிவாக்கத்தின் பொழுது ஸ்ரீபெரும்புதூரில் நிலம் எடுத்ததில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது .
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆறு வழி சாலைக்காக சாலையை விரிவாக்கம் செய்யும்போது நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. அவ்வாறு தனியார் மற்றும் பொது மக்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும்போது அவற்றுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலமாக இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கள் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக வழங்க பட்ட 200 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே உள்ள 70 பேரின் நிலங்களுக்கு 200 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா இல்லை என தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் கடந்த ஆண்டு தகவல் தெரியவந்தது இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் வருவாய்த்துறையினர் இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டனர்.இதனடிப்படையில் வருவாய்த்துறையினர் பீமன் தாங்கள் கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது இல்லாத நிலங்களுக்கு இழப்பீடு பெற்றிருப்பது அம்பலமானது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொழுது அந்த நிலங்கள் யூ.டி.ஆர் என்ற அடிப்படை ஆவணங்களில் அனாதினம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்பதும் முறைகேடாக இழப்பீடு வழங்கப்பட்டது சில நிலத்திற்கு இரண்டு முறை இழப்பீடு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பட்டாவே இல்லாத அரசு நிலங்களுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேலாக இழப்பீடு வாங்கிய தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட அலுவலராக இருந்த நர்மதா மீது தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தவிர ஓய்வு பெற்ற தாசில்தார் , இழப்பீடு வழங்கும் அதிகாரி சண்முகம் ,நிலங்கள் பிரிவு தனி தாசில்தார் ,தேன்மொழி நில அளவர் வரதராஜன் ஆகிய அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அதேபோல் போலி பட்டாதாரர்களான அசோக் மேத்தா, செல்வம் விஜயராகவன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இதில் அசோக் மேத்தா என்பவர் மட்டுமே தன்னுடைய நிலத்திற்கு 33 கோடி ரூபாய் இழப்பீடாக பெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதில் மேலும், 46 ஏக்கர் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது தெரியவந்தது.பல ஆண்டுகளுக்கு முன்பாக, அனாதீனம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக அவை இருந்துள்ளன. இதனால், அந்த 46 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாவையும் சில நாட்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.மொத்தம் 82 ஏக்கர் நிலங்களுக்கான பட்டா அந்த கிராமத்தில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த 82 ஏக்கர் நிலங்களில், நுாற்றுக்கணக்கான வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கியவர்களின் நிலை தற்போது கேள்வி குறியாகியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion