Crime : நடுரோட்டில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்...கதறிய சிறுமி.. நடுங்கவைக்கும் பயங்கரம்.. என்ன நடந்தது?
அமெரிக்காவில் 15 வயது சிறுமி துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime : அமெரிக்காவில் 15 வயது சிறுமி துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலி விட்டுச் சென்றதால் ஆத்திரம்
உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் இளம் வயதினர் மத்தியில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து அமெரிக்காவை அதிர வைத்து வருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்காவில் ஒரு கேளிக்கை விடுத்தியில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பரிதாபமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளார். தற்போது அமெரிக்காவில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா கொலரோடோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். சுமார் 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இப்படி இருக்கும் நிலையில், அந்த சிறுமி தனது மேற்படிப்புக்காக வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளது. அதனால், இதுபற்றி அந்த சிறுவனிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த சிறுவன் மறுப்பு தெரிவித்து, தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் இவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்த சிறுமி, இவரிடம் பேசாமல் இருந்துள்ளார்.
இது பற்றி ஒரு நாள் அந்த சிறுமியிடம் பேசியுள்ளார். அதற்கு அந்த சிறுமி, மேற்படிப்புக்காக வெளியூர் செல்ல இருக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே. பிரேக்கப் செய்து கொள்ளலாம் என்று அந்த சிறுமி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், சிறுமியை தகாத வார்த்தைகாளல் பேசி, அடித்துள்ளதாக தெரிகிறது.
துப்பாக்கிச் சூடு
இதனை அடுத்து, அந்த சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளார். பின்தொடர்வதை அறிந்த அந்த சிறுமி, இதுபற்றி கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் தன்னுடன் பேச வேண்டும் என்று கூறி, சிறுமியின் முகத்தில் குத்தி, அடித்தாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அந்த சிறுவன் ஜூன் 16ஆம் தேதி மாலை 3.45 மணிக்கு சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவை தட்டியுள்ளார். இதனால் வெளியே வந்த சிறுமியை, தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்பு, சிறுமியின் தம்பியை துப்பாக்கி காண்பித்து மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்து அந்த சிறுவன் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.