Crime: 'ஆணாக மாற ஆசைப்பட்டு’ காதலியின் சொல்லை நம்பி உயிரை விட்ட பெண்..!
உத்தரபிரதேச மாநிலத்தில் தன்பாலின உறவில் இருந்த பெண் ஒருவர் தனது காதலியை ஆணாக மாற்றுவதாகக் கூறி, சாமியார் மூலம் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் தன்பாலின உறவில் இருந்த பெண் ஒருவர் தனது காதலியை ஆணாக மாற்றுவதாகக் கூறி, சாமியார் மூலம் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோழியை காதலித்த பெண்:
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் மாவட்டதில் அம்மாவட்டத்தினையே உலுக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ப்ரியா மற்றும் ப்ரீத்தா என்ற இரு பெண்கள் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தங்களின் வீட்டிற்கு தெரியாமல் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது காதல் குறித்து ப்ரீத்தியின் வீட்டிற்கு தெரியவரவே, ப்ரீத்தியின் வீட்டார், ப்ரீத்தியிடம் பேசி ப்ரீத்தியின் மனதை மாற்றி விட்டனர். மேலும் ப்ரீத்திக்கு உடனடியாக திருமணத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் ப்ரீத்தியின் திருமணத்திற்கு ப்ரியா தொந்தரவாக இருந்து வந்துள்ளார்.
சதித்திட்டம்:
இதனால் ப்ரியாவும் அவரது குடும்பத்தினரும் ப்ரீத்தியை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக ஒரு சாமியாரிடம் பேசி அவருக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் பணமும் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிக்கொண்ட சாமியாரும் பிரியாவை கொலை செய்ய ஒப்புக் கொண்டார்.
இதற்கிடையில், ப்ரீத்தி, ப்ரியாவிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதுடன், ப்ரியாவை ஆணாக மாறவும் சொல்லியுள்ளார். ப்ரீத்தியுடன் வாழலாம் என்ற ஆசையில் ஆணாக மாற ப்ரியாவும் சில முயற்சிகளை எடுத்துள்ளார். ப்ரீத்தாவே தனக்கு தெரிந்த சாமியார் இருக்கிறார், அவர் உன்னை ஆணாக மாற்றுவார் என ப்ரியாவிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய ப்ரியா, ப்ரீத்தாவுடன் சாமியார் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
கழுத்தை அறுத்துக் கொலை:
அங்கு சாமியார் ப்ரியாவை ஆணாக மாற்றுவதாக கூறி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை கண்களை மூடி படுக்கச் சொல்லியுள்ளார். இதனை நம்பிய ப்ரியாவும் கண்களை மூடிக்கொண்டு ஆற்றங்கரையில் படுத்துள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் ப்ரியாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ப்ரியா உயிரிழந்துள்ளார்.
ப்ரியா கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவரை காணவில்லை என ப்ரியாவின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை விசாரித்த காவல் துறை ப்ரியா கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்துள்ளது.
விசாரணையில் சாமியார் ராம்நிவாஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது சாமியார் ராம் நிவாஸ், ப்ரீத்தா மற்றும் அவரது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.





















