Women sexually Assaulted: வயலுக்கு சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை: வீடியோவால் வசமாக சிக்கிய 3 பேர்!
45 வயது பெண் ஒருவரை 3 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை கத்தி முனையில் மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபதேபூர் பகுதியில் கடந்த 21ஆம் தேதி 45 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் விறகு எடுப்பதற்கு வயலில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும் அப்பெண்ணை வழுக்கட்டாயமாக தூக்கி சென்று வயலில் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் படிக்க: மனநலம் குன்றிய 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூர இளைஞர் கைது..
அந்தச் சம்பவத்தை மூன்று பேரில் ஒருவர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் பெயரில் பனார்சி(26), ரவிகாந்த், வினோத் என்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த மூன்று பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த மூன்று பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன் அதில் ஒருவர் அந்த வீடியோவை எடுத்து இணையத்தில் பதிவேற்றியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த மூன்று பேர் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். வயலுக்கு மரம் எடுக்க சென்ற 45 வயது பெண் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த மாதம் தேர்தல் நடைபெறும் சூழலில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில கூறி வருகின்றனர். இது ஆளும் பாஜக அரசிற்கு ஒரு முக்கியமான பின்னடைவாக பார்க்கப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: பெண் பயணியை பேருந்தில் இருந்து கீழே தள்ளவிட்ட டிரைவர்..! சாலைமறியலில் ஈடுபட்ட பயணிகள்...! நடந்தது என்ன?