Crime: 4 டாக்ஸி ட்ரைவர்கள் போட்ட ஸ்கெட்ச், தங்கச்சியை தொட்டவனுக்கு நேர்ந்த கதி - ஸ்பேனரை கொண்டு..
Crime: தங்கையுடன் தொடர்பில் இருந்த நபரை திட்டமிட்டு கொலை செய்த அண்ணன் உள்ளிட்ட, நான்கு டாக்ஸி ட்ரைவர்களை போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.

Crime: தங்கையுடன் தொடர்பில் இருந்த நபரை இரும்பு ராடால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
4 டாக்ஸி ட்ரைவர்கள் கைது:
தங்கையுடன் தொடர்பில் இருந்த இளைஞரை கொன்றதாக, அண்ணன் உட்பட நான்கு வாடகை கார் ஓட்டுநர்களை உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். தாகூர் கஞ்ச் பகுதியில் உள்ள ராதா கிராம் தூதா காலனியை சேர்ந்த 26 வயதான கிருஷ்ணா குப்தா, தனது தங்கையுடன் தொடர்பில் இருந்ததாக அந்த பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களுடன் இணைந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. ஜுன் 20ம் தேதி லக்னோவின் மேடியான் மேம்பாலம் அருகே வைத்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்கு விவரம்:
சஞ்சய் யாதவ் எனப்படும் மோனுவின் சகோதரியுடன் தொடர்பில் இருந்ததால் ஏற்பட்ட பிரச்னையில், கிருஷ்ணா குப்தா அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது சகோதரர் சுராஜ் குப்தா கடந்த 19ம் தேதி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி, 103(1), 115(2) மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், “29 வயதான மோனு யாதவ், 21 வயதான வாஷிக் கான் எனப்படும் ராஜா, 23 வயதான முகமது ஆமிர் மற்றும் 20 வயதான ஷரிஃப் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, “தனது சகோதரி உடன் இருந்த தொடர்பை நிறுத்தும்படி மோனு வலியுறுத்தியும், கிருஷ்ணா விலாகமல் இருந்துள்ளார். இந்நிலையில் தான், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த மோனு அழைப்பு விடுத்துள்ளார். அதனையேற்று வந்த கிருஷ்ணாவுடன் மது அருந்திய கும்பல், ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அது முற்றியதில் இரும்பு ராடு, ஸ்பேனர் மற்றும் பிளேட்களை கொண்டு மோனு உள்ளிட்டோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து கைலா பாலம் அருகே கிருஷ்ணாவின் உடலை தூக்கி வீசிவிட்டு, நான்கு பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
ஆயுதங்கள் பறிமுதல்:
விசாரணையின் முடிவில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடு மற்றும் ஸ்பேனர் ஆகியவற்றுடன், குற்றம் நடந்த இடத்திலிருந்து கிருஷ்ணாவின் பணப்பை, பாஸ்புக், ஆதார் மற்றும் பான் கார்ட் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 3 போன்கள் மற்றும் 2 வாகனங்கள் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் மீது ஏதேனும் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளனவா? என்றும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.





















