மேலும் அறிய

Crime: 'வா சீட்டு விளையாட போகலாம்’.. அழகு கலை நிபுணருக்கு ஆசைகாட்டி பயங்கரம்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..

மும்பையை சேர்ந்த அழகு கலை நிபுணர் ஒருவரை அகமதாபாத்திற்கு அழைத்து சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த அழகு கலை நிபுணர் ஒருவரை அகமதாபாத்திற்கு அழைத்து சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையை சேர்ந்த 49 வயதான பெண் அழகு கலை நிபுணராக இருந்து வந்துள்ளார். இவருக்கு ருமணமாகி தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில், இந்த பெண்ணிற்கு சீட்டு விளையாடுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக இவர் அடிக்கடி தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடு வந்துள்ளார். இப்படியான நிலையில், இவருக்கு சீட்டு விளையாட்டின்மூலம் ஒரு நபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. கடந்த 6 ம் தேதி பெண்ணின் வீட்டிற்கு அந்த நபர் வந்து சீட்டு விளையாடி இருக்கிறார். 

அப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் என் வீட்டு இருக்கிறது. அங்கு ஒருநாள் வா நீயும், நானும் சேர்ந்து சீட்டு விளையாடலாம் என்று அழைத்துள்ளார். மேலும், அங்கு என் நண்பர்கள் இருவர் இருக்கிறார்கள் அவர்களுக்கும் உன்னை போலவே சீட்டு விளையாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இதை முழுதாக நம்பிய அந்த பெண், தனக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை அறியாமல் சரி என்று தலை ஆட்டியுள்ளார். தொடர்ந்து, அந்த நபருடன் காரி அகமதாபாத்திற்கு சென்று, சீட்டு விளையாட தொடங்கி இருக்கிறர். அப்போது அந்த பெண்,வேண்டாம்..வேண்டாம்.. என்று கூறியும் அந்த நபர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணுடன் இணைந்து மதுவும் குடித்துள்ளனர். 

அந்த பெண்ணுடன் ஒரே அறையில் இருந்த மூன்று பேருக்கு மது போதை அதிகமாகியுள்ளது. இதையடுத்து, சீட்டு விளையாட்டின்மேல் இருந்த ஆர்வம் குறைந்து, அந்த பெண்ணின் மீது ஆர்வம் திரும்பியுள்ளது. மூன்று பேரும் இணைந்து அந்த போதையில் இருக்கும்போது கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த கொடூரத்தை வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளனர். இந்த விஷயம் குறித்து நீ யாரிடமாவது சொன்னால் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். 

மிரட்டலுக்கு பயந்து பாதிக்கப்பட்ட அந்த பெண், எதிர்ப்பு தெரிவிக்காமல் மும்பை திரும்பி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது கணவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர் வில்லே பார்லே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணையை தொடங்கினர். அதன்படி, கடத்தல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்கு பிரிவுகளில் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்:

கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும். 

டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது. 

டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,982 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 19 பெருநகரங்களில் உள்ள மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 43,414 ஆகும்.

2021 இல், தேசிய தலைநகரில் 136 வரதட்சணை மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 19 பெருநகரங்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 36.26 சதவீதமாகும். அனைத்து பெருநகரங்களிலும் மொத்தம் 8,664 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில், பெண்கள் கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பாக 3,948 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன.

2021 ஆம் ஆண்டில், போக்சோ சட்டத்தின் கீழ் 1,357 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 833 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது பெருநகரங்களில் மிக அதிகமாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Embed widget