பெண்களிடம் ஆபாச பேச்சு! சிக்கிய தவெக விர்ச்சுவல் வாரியார்.. என்ன விஜய் இதெல்லாம்?
தவெக ஆதரவு இன்ஸ்டாகிராம் இன்ப்ளுயன்ஸர் விஷ்ணுவை சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பியுட்டிஷியன் அஸ்மிதாவின் கணவரும் தவெக உறுபினருமான ஸ்ரீ விஷ்ணு பல பெண்களுக்கு வலைவீசி வந்த நிலையில் நண்பரின் தங்கையிடமே ஆபாசமாக பேசி சிக்கி கொண்டு மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானது தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியதில் விஜய் ஆதரவாக ஏரளாமான இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர், சமீபத்தில் கூட தவெக ஐடிவிங் கூட்டத்தில் தனக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருபவர்களைன் விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று அழைப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார்.
சிக்கிய விர்ச்சுவல் வாரியர்
இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக விஷ்ணு என்பவர் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். நண்பர்களுடன் வார வாரம் பார்ட்டி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய நண்பரின் தங்கைக்கு இன்ஸ்டாகிராமில் மெசெஜ் செய்துள்ளார். அந்தப்பெண்ணிடம் ஆன்லைன் சாட்டில் ஆபாசமாக பேசி அவரிடம் தவறான உறவுக்கு முயன்றதாக தெரிகிறது.அந்த பெண்னின் அண்னன் மற்றும் நண்பர்கள் அனைவரும் தங்கையின் இன்ஸ்ட ஐடியில் இருந்து தங்கை பேசுவது போல் பேசி விஷ்ணுவை வீட்டுக்கு வரவைத்து கையும்களவுமாக பிடித்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர் என்ன செய்தார் என்பதை சொல்ல சொல்லி வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளனர்.
ஏற்கெனவே திருமணம் ஆனவர்:
மேக்ஓவர் கலைஞராக இருந்து வரும் அஸ்மிதா மற்றும் அவரின் கணவர் ஸ்ரீ விஷ்ணு இருவரும் மிகவும் பிரபலமான யூடியூபர்கள். இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்றதாக அறிவித்த நிலையில் எங்கள் பிரிவு தான் நாங்கள் வைத்து இருந்த அன்பை புரியவைத்தது என இருவரும் மறு திருமனம் செய்துக்கொண்டனர். அவர்கள் விவாகரத்து பெற்ற போது இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் தற்போது அஸ்மிதா கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 1 மாததில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் ட்ரேடிங்கில் பணமோசடி பல பேரை ஏமற்றியதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
என்ன செய்யப்போகிறார் விஜய்?
தமிழக்த்தில் பெண்களின் பாதுக்காப்பு குறித்து அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வரும் தவெக தலைவர் விஜய தனது கட்சி ஆதரவு வெர்ச்சுவல் வாரியர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.






















